2024 நவம்பர் 02, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கிக்கு SPO

Freelancer   / 2024 ஜூலை 29 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றாடல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) தொடர்பான மதிப்பீடுகளை வழங்கும் ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனமான Sustainable Fitch இலிருந்து, கொமர்ஷல் வங்கி தனது நிலைபெறுதகு பிணைய திட்டப்பணிக்காக, இரண்டாம் தரப்புக் கருத்தை (SPO) பெற்றுள்ளது.

SPO என்பது சர்வதேச மூலதன சந்தைகள் சங்கத்தின் (ICMA) பசுமைப் பிணைய கோட்பாடுகள் 2021 உடன் இணைந்த மூன்றாம் தரப்புக்கான அங்கீகாரம் ஆகும். SPO இன் பற்றுச்சீட்டானது பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கு வங்கிக்கு உதவுகிறது.

வங்கியின் நிலைபெறுதகு பிணைய திட்டப்பணிக்காக (Sustainable Green Bond) பெறப்பட்ட SPO பற்றி கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க கருத்து தெரிவிக்கையில், ‘நிலைபெறுதகு தன்மையின் மீதான எங்கள் கவனம் தற்போது மெய்நிகர் ரீதியில் ஒவ்வொரு செயல்பாட்டு அம்சத்தையும் உள்ளடக்கியதுடன் மற்றும் நிலையான பிணையப் பத்திரம் வழங்குவது வங்கியின் நிலைத்தன்மையை நோக்கிய பயணத்தில் அடுத்த மைல்கல்லை குறிக்கும். இந்த நோக்கத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிணையப் பத்திர கட்டமைப்பை நாங்கள் பெற்றிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன் மேலும் எங்கள் நிலைபெறுதகு தன்மைக்கான வரைபடத்திற்கான அவர்களின் உதவி மற்றும் பங்களிப்பிற்காக GGGI மற்றும் Sustainable Fitch ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.' என்றார்.

கொமர்ஷல் வங்கியின் திட்டப்பணியின் கீழ் தகுதியான பசுமைத் திட்டங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை கட்டிடங்கள், சுத்தமான போக்குவரத்து, வாழ்க்கை வளங்கள் மற்றும் நில பயன்பாட்டிற்கான சுற்றுச்சூழல் ரீதியிலான நிலையான முகாமைத்துவம், நிலையான நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் காலநிலை மாற்றம் ஆற்றல் திறன், மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மற்றும் சுற்று-பொருளாதாரம் தழுவிய தயாரிப்புகள், உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகள் என்பன உள்ளடங்குகின்றன.

தகுதியான சமூகத் திட்டங்களில் நியாயமான விலை அடிப்படையிலான உள்ளகக் கட்டமைப்பு, அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல், வீடமைப்பு தேவைகளுக்கான உதவி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான உணவு முறைமைகள் ஆகியவை அடங்கும். சமூக திட்டங்கள் குறைந்த வருமானம் முதல் மிதமான வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .