Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 25, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 07 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இளம் கிரிக்கெட் நட்சத்திர வீரர்களுள் ஒருவராக திகழும் மதீஷ பத்திரண, கொமர்ஷல் வங்கியின் வர்த்தக நாம தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிணங்க மதீஷ குறிப்பாக கொமர்ஷல் வங்கியின் டெபிட் அட்டை வர்த்தகநாமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார், நாட்டின் மிகப்பெரிய டெபிட் அட்டை தளமான கொமர்ஷல் வங்கி டெபிட் அட்டை வர்த்தக நாமமானது இந்த இளம் கிரிக்கெட் நட்சத்திர வீரரின் பிரபலமான குணங்களான வேகம் மற்றும் சுறுசுறுப்பினை பிரதிபலிப்பது இங்கு குறிப்பிட்டு கூற வேண்டிய சிறப்பம்சமாகும். 22 வயதில், வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவரின் பெயர் ஏற்கனவே இலங்கையிலும் இந்தியாவிலும் பிரபலம் பெற்று திகழ்கிறது. இந்த இளம் கிரிக்கெட் வீரரின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் மீளெழுச்சி போன்ற குணங்களை இலங்கையின் அதிக விருதுகளைப் பெற்றுள்ள நிதியியல் நிறுவனமான கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளதாக கொமர்ஷல் வங்கி பெருமிதத்துடன் கூறுகிறது.
'கொமர்ஷல் வங்கியின் வர்த்தக நாம தூதுவராக மதீஷ பத்திரணவை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க தெரிவித்தார். 'அவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரும் மற்றும் ஆட்டத்தை மாற்றியமைப்பவராகவும் திகழ்கின்றார். நாம் ஒன்றிணைந்து, இலங்கைக்குள் மட்டுமன்றி உலக அரங்கிலும் சிறந்து விளங்குவதற்கான நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.'
கண்டியில் பிறந்து திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற மதீஷ, நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொடருக்கு முன்னதாக, 12 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 29.8 திறன் விகிதத்தில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். T20 சர்வதேச போட்டிகளில் அவரது சாதனை இன்னும் சிறப்பாக திகழ்கிறது. 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை 10.5 என்ற அற்புதமான திறன் விகிதத்தில் கைப்பற்றியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பிரபலமான பெரும் கிரிக்கெட் நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனி தனது வழிகாட்டியாக இருந்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மதீஷ 13.2 திறன் விகிதத்தில் 34 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கொமர்ஷல் வங்கியானது Visa, Mastercard, UnionPay மற்றும் LankaPay (JCB) வர்த்தக நாமங்களில் டெபிட் அட்டைகளை வழங்கி வருகிறது. அனைத்து கொமர்ஷல் வங்கி அட்டைகளும் இயல்பாகவே சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று திகழ்கின்றன. மேலும் அட்டையுடனான மற்றும் அட்டை - இல்லாத பரிவர்த்தனைகள், ந-வர்த்தகம் மற்றும் இணையத்தள கொள்வனவுகள் ஆகிய இரண்டிற்கும் ஏற்புடையனவாக திகழ்கின்றன. உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதே போல் இலங்கையில் உள்ள 7,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில், கொமர்ஷல் வங்கி ஷொப்பிங் டெபிட் அட்டை என்பது பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதற்கான எளிதான மற்றும் மிகவும் வசதியான வழியாகக் கருதப்படுகிறது.
கொமர்ஷல் வங்கியின் டெபிட் அட்டைகள் சாதாரண சேமிப்புக்கணக்குகளில் இருந்து விசேட பண வைப்புக் கணக்குகள் வரை இளைஞர், மகளிர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் போன்ற பரந்த வேறுபட்ட பிரிவுகளில் பல்வேறு சேமிப்புக்கணக்குகள் மற்றும் நடைமுறை கணக்குகளுக்கு வழங்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
24 Jan 2025