2025 மே 19, திங்கட்கிழமை

கல்கிஸையில் துவாரகா உணவகம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரகா உணவகத்தின் இரண்டாவது கிளை அண்மையில் இல 10, பழைய குவாரி வீதி, கல்கிசை என்ற முகவரியில் திறந்து வைக்கப்பட்டது. 100 விருந்தினர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தும் இடவசதிகளுடன் குளிரூட்டப்பட்ட சகல வசதிகளையும் கொண்டதாக இந்தப் புதிய கிளை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தார் தெரிவிக்கின்றனர். 

துவாரகா உணவகத்தில் வட இந்திய, தென்னிந்திய உணவுகளை சமைப்பதில் கைதேர்ந்த சமையற் கலை வல்லுனர்கள் பலர் வட இந்தியாவிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டு பணியில்  அமர்த்தப்பட்டுள்ளார்கள். வட இந்திய, தென்னிந்திய உணவுகளை அதன் அசல் சுவையுடன் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் நோக்கத்தில் இவ்வாறு இந்திய சமையற்கலை வல்லுனர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரத்தியேகமாக குழுவாக உணவருந்தும் வகையில் 25 விருந்தினர்களுக்கான வசதிகளை கொண்ட இரண்டு விஷேட அறைகளையும் கொண்டுள்ள துவாரகா உணவகமானது, காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை இந்த உணவகம் திறந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X