Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி கேபிள் பிஎல்சி, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 18ஆவது SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் 2019 இல் இரண்டு விருதுகளை தனதாக்கியிருந்தது.
ஆண்டின் சிறந்த B2B வர்த்தக நாமம் (தங்க விருது), ஆண்டின் சிறந்த சமூக பொறுப்புணர்வு வர்த்தக நாமம் (வெண்கல விருது) ஆகிய இரு விருதுகளை களனி கேபல்ஸ் பிஎல்சி தனதாக்கியிருந்தது.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதுடன், இலங்கையில் காணப்படும் சிறந்த கூட்டாண்மை வர்த்தக நாமங்களின் செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வுகளிலும் களனி கேபிள்ஸ் பிஎல்சிக்கு மேற்படி விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத் தெரிவிக்கையில், “SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் 2019 நிகழ்வில் களனி கேபிள்ஸ் இரு பெருமைக்குரிய விருதுகளை மீண்டும் ஒரு தடவை வெற்றியீட்டியுள்ளமை மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமாக அமைந்துள்ளது” என்றார்.
களனி கேபிள்ஸ் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், நிர்மாணத் துறையில் பாதுகாப்பான மின் மற்றும் தொடர்பாடல் வயர்கள் தெரிவில் களனி கேபல்ஸ் நாமம் முன்னிலையில் திகழ்கின்றது. இதை உறுதி செய்யும் வகையில் இந்த விருதுகள் அமைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
3 hours ago