2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’கெதெல்ல’ கண்காட்சியில் கொமர்ஷல் வங்கியின் நலன்கள்

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு BMICH இல் நடைபெற்ற வீடமைப்பு கண்காட்சியான 'கெதெல்ல லிவிங் இன் ஸ்டைல்' ‘Kedella’ Living in Style நிகழ்வுக்கு உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக கொமர்ஷல் வங்கி இணைந்திருந்ததுடன், குறித்த கண்காட்சியைப் பார்வையிட்ட வீடு நிர்மாணிப்பாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களின் அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளது.

கெடெல்ல கண்காட்சியில் பதிவு செய்த பார்வையாளர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான நிலையான விகிதத்திற்கு எதிராக. வருடாந்தம் 1.5% சிறப்பு வீதக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த வாடிக்கையாளர்கள் ஆவணக் கட்டணங்களில் 50% விலைக்கழிவுக்கும் தகுதியுடையவர்கள் ஆகின்றனர். அதே வேளை முதல் முறையாக வீடு கட்டுபவர்கள் அல்லது வீடு கொள்வனவு செய்பவர்கள் இலவசக் குறையும் தவணை உத்தரவாதக் கொள்கை (DTAP) அல்லது வங்கியிடமிருந்து கடன் பாதுகாப்புக் காப்புறுதியைப் பெறுவார்கள்.

மேலும் கொமர்ஷல் வங்கி, கெதெல்ல கண்காட்சியில் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன்கள் மற்றும் குத்தகைக்கான வட்டி வீதத்தில்   0.5% குறைப்பு மற்றும் ஆவணக் கட்டணங்களில் 50% விலைக்கழிவு என்பவற்றையும் வழங்கியுள்ளது.

கெதெல்ல கண்காட்சியானது இலங்கையில் மிகப் பாரிய வீடு, உள்ளகம், சொத்து மற்றும் நிர்மாணக் கண்காட்சியாக திகழ்கிறது. மேலும், இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உற்பத்தியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் நிதியியல் சேவை வழங்குநர்களுக்கு நேரடியாகத் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான தனித்துவமான நேருக்கு நேர் வாய்ப்பை வழங்குகிறது. கொமர்ஷல் வங்கி கடந்த வருடங்களில் பல கெதெல்ல கண்காட்சிகளுக்கு தனது ஆதரவினை வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X