Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 20 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் புதிய தலைவராக டி. சூசைப்பிள்ளை அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்குத் தலைமை தாங்கிய, சிரேஷ்ட சட்டத்தரணியான சிசில் பெரேரா, பணிப்பாளர் சபையில் அங்கம் வகிப்பதற்கான ஒழுங்கு விதிகளின்படி ஒன்பது வருடங்களின் பின்னர் தலைமைப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்தே, டி. சூசைப்பிள்ளை தலைவராக நியமனம் பெற்றுள்ளார்.
இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகம், இலங்கை சான்றழிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவகம் ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்த இவர், நிபுணத்துவம் பெற்ற பல முன்னணி குத்தகைக் கம்பனிகளின் பணிப்பாளர் சபைகளில் நிதிப் பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி, முகாமைத்துவப் பணிப்பாளர் போன்ற உயர் பதவிகளை வகித்துள்ளார்.
2014 ஜனவரியில் இவர், கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன், பணிப்பாளர் சபையின் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் ஓர் உறுப்பினராக அங்கம் வகிக்கும் நிலையில், பணிப்பாளர் சபை கணக்காய்வுக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் சில வருடங்களுக்கு முன்னதாக, கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சியின் ஒரு துணை நிறுவனமான ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்மன்ட்ஸ் பி.எல்.சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவராகப் பதவி வகித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
2 hours ago