Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 27 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி தனது மகளிர் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிப்புள்ள பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் அதன் முதலாவது பிரத்தியேக மகளிர் வங்கி நிலையத்தை ஆரம்பித்துள்ளது. இது பெண்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
ஷஅணகி மகளிர் வங்கி நிலையம்| என்று பெயரிடப்பட்ட இந்த நிலையம், அண்மையில் யாழ்ப்பாணக் கிளையில் திறந்து வைக்கப்பட்டது. இது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் இலக்கம் 474 இல் அமைந்துள்ளது.
பெண் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அணகி மகளிர் வங்கி நிலையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, குழந்தைகள் விளையாடும் பகுதி, பிரத்தியேக அடகு பிரிவு, ஆலோசனை பிரிவு, சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், எந்தவொரு கொமர்ஷல் வங்கி கிளையிலும் வழங்கப்படும் முழு அளவிலான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் வழங்குகிறது.
இந்த முயற்சியின் மூலம், வங்கி பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, அதே போல் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் பெண்களை வலுப்படுத்துவதற்குமான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக வங்கி தெரிவித்துள்ளது. பிரத்தியேகமான ஷஅணகி மகளிர் வங்கி நிலையம|;, பெண்கள் எதிர்கொள்ளும் தேவைகள், விருப்பங்கள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான சூழலை உருவாக்குவதன் மூலம் பாரம்பரிய வங்கி முறைக்கு அப்பால் சென்று, விரிவான வங்கி சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஷஅணகி மகளிர் வங்கி நிலையத்தின் திறப்பு விழாவில் கொமர்ஷல் வங்கியின் மனிதவள முகாமைத்துவ பிரதிப் பொது முகாமையாளர் இசுறு திலகவர்தன மற்றும் வங்கியின் சிரேஷ்ட மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இந்த மைல்கல் முயற்சியின் மூலோபாய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago