Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 14 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் டிஜிட்டல் மாற்ற நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதற்கும் தனது முதன்மை டிஜிட்டல் வங்கி தளமான 'கொம்பேங்க் டிஜிட்டல்' மூலம் பிராந்திய ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஷவடக்கினை வலுப்படுத்துதல்| டிஜிட்டல் சிறப்பை துரிதப்படுத்துதல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் டிஜிட்டல் விழிப்புணர்வு முயற்சி திட்டமொன்றினை கொமர்ஷல் வங்கி நடத்தியது.
திண்ணை ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வை, வங்கியின் டிஜிட்டல் வங்கிப் பிரிவு, வட பிராந்திய அலுவலகம் மற்றும் மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டு பிரிவுகளின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்தது. இதில் வாடிக்கையாளர்கள், சிரேஷ்ட வங்கி அதிகாரிகள் மற்றும் பல்வேறு வர்த்தக பிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வு, கொம்பேங்க் டிஜிட்டல் இன் அம்சங்கள் மற்றும் சேவைகள் மற்றும் வங்கியின் பிற டிஜிட்டல் தயாரிப்புகளின் முழு நோக்கம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு தகவல்கள் மற்றும் அறிவினை வழங்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டிருந்ததுடன் அணுகலை உறுதி செய்வதற்காக தமிழ் மொழியில் செயல்விளக்கங்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த அமர்வானது பிராந்தியத்தில் தனிநபர்கள், SME யினர் மற்றும் நிறுவனங்களுக்கான நிதியியல் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த, பில் செலுத்துதல்கள் முதல் H2H (Host-to-Host) மற்றும் ComBank Trade Link போன்ற மேம்பட்ட சேவைகள் வரை அன்றாட நிதியியல் நடவடிக்கைகளில் தளங்களை எவ்வாறு தடையின்றி ஒருங்கிணைக்க முடியும் என்பதை காட்சிப்படுத்தியது.
விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் விருந்துபசார நிகழ்விலும் பங்கேற்றதுடன் இது வங்கி பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாடலில் ஈடுபடவும், கொம்பேங்க் டிஜிட்டல் உடன் நேரடி அனுபவத்தைப் பெறவும், கருத்துக்களை வழங்கவும் வாய்ப்பளித்தது. இந்த ஊடாடும் வடிவமானது சில்லறை நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் தொடர்பான டிஜிட்டல் வங்கி தீர்வுகள் குறித்த வாடிக்கையாளர் புரிதலை மேலும் ஆழப்படுத்த உதவிய அதே வேளை வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கத்திற்கான வங்கியின் உறுதிப்பாட்டின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த முயற்சி தொடர்பாக கருத்து தெரிவித்த வங்கியின் தனிநபர் வங்கிப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் எஸ். கணேசன், 'எமது டிஜிட்டல் திறன்களை வாடிக்கையாளர்களின் வாசலுக்கு எடுத்துச் செல்வதே எமது மாற்றத்திற்கான பயணத்தின் நோக்கமாகும். இந்த முயற்சிகள் மூலம், எமது தளங்களை நாம் காட்சிப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வாடிக்கையாளரும் - பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல் - எமது மிகவும் மேம்பட்ட டிஜிட்டல் கருவிகளிலிருந்து பயனடையத் தயாராக இருப்பதை உறுதி செய்கிறோம். இது போன்ற நிகழ்வுகள் உள்ளூர் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவுகின்றன, மேலும் டிஜிட்டல் பயன்பாடானது புதிய வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் மாற்றத்தை ஊக்குவிக்கின்றது.'
11 minute ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 Oct 2025
18 Oct 2025