Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 26 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கிக்கும் Apple இலத்திரனியல் சாதனங்களின் அங்கீகரிக்கப்பட்ட மீள் விற்பனையாளரான Gnext Store ற்கும், இடையிலான புதிய பங்காண்மையின் மூலம், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Apple சாதனங்களை நியாயமான விலைகளில் கொள்வனவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி தனியார் வங்கி மற்றும் Gnext Store ஆகியவற்றிற்கிடையான இந்த பங்காண்மையின் உதவியுடன் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhones, MacBooks, iPads மற்றும் Apple கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை, வட்டியில்லா 18 மாத தவணைக் கொடுப்பனவினூடாகக் கொள்வனவு செய்யும் வாய்ப்பின் மூலம் தமது புதிய தொழில்நுட்ப வசதிகளுக்கான கனவுகளைத் தங்குதடையின்றி நனவாக்கிக் கொள்ள முடியும்.
இந்த மூலோபாய ஒப்பந்தமானது, வாடிக்கையாளர்கள் Apple சாதனங்களின் விலையில் 100% ஐயும் கொமர்ஷல் வங்கியிடமிருந்து தனிநபர் கடனாகப்பெற்று முற்றிலும் வட்டி இல்லாமல் அதனை 18 மாதங்கள் வரை சமமான மாதாந்த தவணைகளில் மீளச்செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. விரைவான மற்றும் தடையில்லா அனுபவத்தை உறுதி செய்வதற்காக கடன் ஒப்புதல் செயல்முறையானது நெறிப்படுத்தப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தக் கடன் திட்டத்தின் மூலம் தமது iPhones களைக் கொள்வனவு செய்யும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு Gnext Store ஒரு ஜோடி AirPod களை இலவசமாக வழங்கவுள்ளது. இது மேற்குறிப்பிடப்பட்ட கவர்ச்சிகரமான சலுகைக்கு மேலும் பெறுமதியைச் சேர்ப்பதாக உள்ளது.
இந்த சலுகையை மேலும் கவர்ச்சிகரமாக்கும் வகையில், Gnext Store> கொள்வனவு செய்யப்பட்ட சாதனங்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்வதுடன் iPhone 16 தயாரிப்பு வகைகளுக்கு மட்டுமே கிடைக்கும் அதன் பிரத்தியேக “Shield Pro” பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கொள்வனவினை மீளப்பெறும் வசதியையும் வழங்குகிறது. iPhone 16 தயாரிப்பு வகைகளைக் கொள்வனவு செய்பவர்களுக்கு இரண்டு திரை மாற்றீடுகள், இரண்டு கைபேசிக்கான கவசவுறை மாற்றீடுகள் இலவசமாக வழங்குவது மட்டுமல்லாது, கைபேசிக்கு மேலதிகமாக நீடிக்கப்பட்ட ஒரு வருட உத்தரவாதத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கான விரிவான விற்பனைக்குப் பின்னரான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
இந்தப் பங்காண்மையானது உயர்நிலை நுகர்வோருக்கு புத்தாக்கமான நிதிநிலை சார் தீர்வுகளை வழங்குவதற்காக உலகளாவிய ரீதியில் முதற்தர வர்த்தக நிறுவனங்களுடன்; இணைந்து கொள்ளும் கொமர்ஷல் வங்கியின் யுக்தியைப் பிரதிபலிக்கிறது. அத்துடன் இலங்கையில் புதிய தொழில்நுட்ப சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கு சலுகை அடிப்படையிலான கடனுதவியை வழங்குவதில் இது ஒரு புதிய அளவுகோலைக் குறிப்பதாக உள்ளதுடன், மேலும் அதிகமான வாடிக்கையாளர்கள் Apple தயாரிப்புகளின் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மையை எவ்வித நிதிநிலை அழுத்தமும் இன்றி அனுபவிக்க வழிவகுப்பதாக வங்கி தெரிவித்துள்ளது.
21 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago