Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு அறக்கட்டளையானது வைத்தியர்களையும் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களையும் பாதுகாப்பதற்காக, வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியக் கருவிகளை அன்பளித்துள்ளது. இத்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் இதனால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சையளிப்பதற்கும் இவ்வன்பளிப்புகள் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, தெல்தெனிய ஆதார வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியனவே, சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அன்பளிப்பு வழங்குவதெற்கென வங்கியால் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளாகும்.
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண (PPE) தொகுதிகள், N95 பாதுகாப்பு முகமூடிகள், சத்திரசிகிச்சை முகமூடிகள், சத்திரசிகிச்சை அணிகலன் (surgical suits), மொத்தமாகவும் அதேபோன்று பாவனைக்கேற்ற வகையிலும் கைத்தொற்று நீக்கிகள் ஆகியன, அடையாளங்காணப்பட்ட அளவில் வங்கியால் வழங்கிவைக்கப்பட்டன. அதேபோன்று, அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள கொவிட்-19 நிதியத்துக்காக நிதி அன்பளிப்பொன்றையும் வங்கி மேற்கொண்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன், “கொவிட்-19க்கு எதிரான போரில் முன்னரங்குகளில் இருந்து செயற்படும் வைத்தியப் பணியாளர்களின் வீரத்தை நாம் உண்மையிலேயே மெச்சுகிறோம். அத்தோடு, சவால்மிக்க இக்காலத்தில் எமது நாட்டைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் தொடர்ந்தும் ஆதரவை வழங்குவோம். எமது கூட்டாண்மைத் துறையைச் சேர்ந்த ஏனைய நிறுவனங்களோடு நாமும் வழங்கியிருக்கும் இப்பங்களிப்புகள், அரச நிதித்துறை மேல் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தைக் குறைத்து, எமது பராமரிப்பு வழங்குநர்களைப் பாதுகாக்குமென நாம் நம்புகிறோம்“ எனத் தெரிவித்தார்.
உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. வங்கியானது தனது 100ஆவது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. 2019ஆம் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட சர்வதேச, உள்நாட்டு விருதுகளை வென்றிருந்த வங்கி, இலங்கையில் 268 கிளைகளையும் 865 ஏ.டி.எம்-களையும் கொண்டுள்ளது.
முழுமையான வசதிகளைக் கொண்ட பெரும்பான்மைப் பங்குடைமையைப் பிரிவு 1 வங்கியை மாலைதீவுகளில் கொண்டிருப்பதற்கு மேலதிகமாக, பங்களாதேஷில் 19 நிலையங்களைச் செயற்படுத்துவதோடு, யாங்கோனில் பிரதிநிதித்துவ அலுவலகமும் நைப்பியிடோவில் நுண்நிதி நிறுவனமுமென மியான்மாரிலும், கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் விரிந்து காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .