Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 02 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழ்க்கையில் பெண்கள் பல்வேறு நிலைகளில் வழங்கி வரும் பங்களிப்பை விளக்கும் வகையிலான மூன்று நாள் கண்காட்சி அண்மையில் கண்டி நகரில் இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கியின் மகளிருக்கான உன்னத சேமிப்புக் கணக்குத் திட்டமான 'அணகி' பூரண ஆதரவு வழங்கியது.
இந்தக் கண்காட்சிக்கு 'The Women' என்ற மிகவும் பொருத்தமான பெயர் இடப்பட்டிருந்தது. கண்டி நகர மையத்தில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சியில் 75 கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சமையற்கலை, அழகு சாதனம், கேசப் பராமரிப்பு, கைப்பணிக்கலை, நவநாகரிக ஆடை அலங்காரம் என்பனவற்றோடு தொடர்புடைய இந்தக் கூடங்களில் அவை தொடர்பான விளக்கவுரைகள் மற்றும் செயலமர்வுகள் என்பனவும் இடம்பெற்றன. மத்திய மலைநாட்டின் தலைநகர் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பெருந் திரளான பெண்கள் தமது குடும்பத்தவர்களுடன் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் பிரத்தியேக வங்கிப் பங்காளியான கொமர்ஷல் வங்கி இதனை முன்னிட்டு பல விஷேட நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தது. இது தொடர்பான போட்டிகள் பல நடத்தப்பட்டு அவற்றில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வின் போது புதிதாக 'அணகி' கணக்குகளைத் திறந்த பெண்களுக்கு வங்கி பல பரிசுகளையும் வழங்கியது.
மகளிரை அங்கீகரிக்கும் வகையிலும் அவர்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் கொமர்ஷல் வங்கியின் 'அணகி' கணக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்கு மகத்தானதாகும். இலங்கையில் உள்ள 11 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் தமது பன்முக பங்களிப்புக்களுக்கு மேலதிகமாக குடும்பத்தின் நிதிப் பொறுப்பை ஏற்று வருவதும் அதிகரித்துள்ளது.
குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டு 'அணகி' கணக்கொன்றை திறக்கலாம். சாதாரண சேமிப்புக் கணக்கிற்கான வட்டியை விட அதிக வட்டி இதற்கு வழங்கப்படுகின்றது. இது பெண்களுக்காக வழங்கப்படும் வட்டி வீதங்களில் மிகச் சிறந்த ஒன்றாகும். தங்க நகை வாங்குவதற்கு சலுகை வட்டியில் தங்க கடன், 35 விற்பனை நிலையங்களில் கழிவுகளைப் பெறக் கூடிய கொம்பேங்க் ஷொப்பிங் டெபிட் கார்ட் என்பனவும் மேலதிகமாக வழங்கப்படுகின்றன.
4 minute ago
45 minute ago
50 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago
50 minute ago
4 hours ago