Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலாவது இந்திய மூலாதார கண்காட்சி 2015 (Indian Sourcing Fair 2015) டிசம்பர் 8 முதல் 12ஆம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்திய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படும் பொதுத் துறை நிறுவனமான இந்திய வணிக ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் (ITPO) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதற்கு ஆதரவளிக்கின்றது.
'வர்த்தக கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதில் இந்திய அரசாங்கத்தின் முதன்மையான வணிக ஊக்குவிப்பு முகவரகமாக திகழும் ITPO இனால் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டு ஒரு நடவடிக்கையாக இது காணப்படுகின்றது. பரந்தளவில் அனைத்து இந்திய நிறுவனங்களின் பங்குபற்றுதலையும் இது ஒன்றாக இணைத்துள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட இந்திய விநியோகஸ்தர்களின் உற்பத்தி, சேவைகள் இங்கு காட்சிப்படுத்தப்படும். அத்துடன் இலங்கை சந்தையில் இந்திய பொருட்களுக்கு அதிகரித்துள்ள கேள்வி மற்றும் அதிகளவிலான தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும் இருக்கும். இக் கண்காட்சி கொழும்பில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும் என்பதுடன், இலங்கையில் இடம்பெறவுள்ள மிகப் பெரிய இந்திய கண்காட்சியாகவும் இது திகழ்கின்றது' என்று இந்திய வணிக ஊக்குவிப்பு ஊக்குவிப்பு ஒன்றியத்தின் பொது முகாமையாளரான செல்வி. மீரா தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு புறம்பாக, இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஆகியனவும் India Sourcing கண்காட்சிக்கு தமது ஒப்புதல் ஆதரவை அளித்திருக்கின்றன. இக் கண்காட்சிக்கான பங்காளித்துவ மாநிலமாக ஒடிசா மாநில அரசாங்கம் ஒன்றிணைந்து உள்ளது.
இந்திய மூலாதார கண்காட்சியின் போது - பொறியியல் பொருட்கள், உட்கட்டமைப்பு, சுரங்கம் சார்ந்த மற்றும் நிர்மாண உபகரணம், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், ஜவுளி வகைகள், நெய்யப்பட்ட துணிகள் மற்றும் தைக்கப்பட்ட ஆடைகள், வீட்டுத் தளபாடங்கள் மற்றும் கைத்தறிப் பொருட்கள், தோற் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் நகைகள், உணவு மற்றும் ஹோட்டல் துறை உற்பத்திகள், அதேநேரம் கடல்சார் உற்பத்திகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த காட்சிப்பாடுத்துனர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக முதல்நிலை செயலாளரான திரு. கார்த்திக் பண்டே India Sourcing fair 2015 இன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துக் கூறுகையில், 'விரைவில் நடைபெறவிருக்கும் இந்திய மூலாதார கண்காட்சிக்கு ஆதரவளிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எதிர்கால கொள்வனவாளர்களை இந்தியாவை சேர்ந்த தரமான விநியோகஸ்தர்களுடன் தொடர்புபடுத்துவதற்கும் அதேபோல் இந்திய உற்பத்திகளின் தராதரங்களை காட்சிப்படுத்துவதற்கும் இது சிறந்ததொரு சந்தர்ப்பமாக காணப்படுகின்றது. அடுத்துவரும் வருடங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு வணிக கேந்திர மையமாக கொழும்பு மாற்றியமைக்கப்படுகின்றது. இந்தப் பயணத்தில் ஒரு அங்கமாக திகழ்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்' என்றார்.
செல்வி மீரா மேலும் கூறுகையில், 'கொள்வனவாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிற்கு ஒரு முக்கியமான தளமேடையாக India Sourcing fair கண்காட்சி காணப்படும். இக்கண்காட்சிக்காக கொழும்பிற்கு வந்திருப்பதையிட்டும், ஊக்கமளிக்கும் பங்காளித்துவங்களை ஏற்படுத்திக் கொள்வதையிட்டும் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்;' என்று குறிப்பிட்டார்.
இந்த கண்காட்சியானது, இந்தியாவின் மிகச் சிறந்த விநியோகஸ்தர்கள் சிலரை சந்திப்பதற்கான மிகவுன்னதமான ஒரு சந்தர்ப்பத்தை இலங்கை வர்த்தக சமூகத்திற்கு வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அத்துடன் பல்வேறுபட்ட வணிகத்திலிருந்து–வணிக (B2B) அமர்வுகள் மற்றும் கூட்டங்களை இக் கண்காட்சி உள்ளடக்கியிருக்கும். இதில் ஆர்வமுள்ள தரப்பினர், உள்நாட்டு பங்காளர்களான எம்.பி.இவன்ட்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினை தொடர்பு கொண்டு, கலந்தாய்வுகளை முன்னேற்பாட்டை செய்து கொள்ளலாம்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago