2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சந்தனாலேபவின் அனுசரணையில் பாடல் நிகழ்வு

Gavitha   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல்யமான இசையுணர்வை புதிய தலைமுறைகளுக்கு பிரதிநிதித்துவப்படுத்துபவரான சங்க டினேத்தின் 'Sanka Dineth live in concert  With 28 Voices' எனும் இசை நிகழ்வு, எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில், மஹரகமையிலுள்ள தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு இலங்கையின் மிகப்பழமை வாய்ந்த ஆயுர்வேத அழகுசாதன உற்பத்திகளின் வர்த்தக நாமமான சந்தனாலேப, பிரதான அனுசரணையாளராக கைகோர்த்துள்ளது.

இரசிகர்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டு, இலங்கையின் இசைத்துறையில் 28 புதிய பாடகர்கள் இந்நிகழ்வின் மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சியளித்த சங்க டினேத், தற்போது ஒரு பாடகராக மாத்திரமின்றி, ஒரு தலைச்சிறந்த இசையமைப்பாளராகவும் காணப்படுகின்றனார். அந்த 28 பாடகர்களின் இசையடங்கிய இறுவட்டும் 'Sanka Dineth live in concert  with 28 voices' எனும் பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வைப் பற்றி சங்க டினேத் கருத்து தெரிவிக்கும் போது, 'எனது இரசிகர்களுக்கு நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், எனது பிறந்த நாளான எதிர்வரும் 28ஆம் திகதியன்று, இலங்கை இசைத்துறையில் 28 புதிய இசைகளுக்கான   சொந்தக்காரர்களை அறிமுகப்படுத்துவேன்.

இந்நிகழ்வானது, இந்த 28 பேருக்கும் இலங்கையின் இசைத்துறையில் பல சாதனைகளை படைப்பதற்கும் உயர்ந்த நிலையை அடைவதற்கும் சந்தர்ப்பமாக அமையும் என நம்புகின்றேன். அந்நிகழ்வில் வெளியீடு செய்யப்படும் இறுவட்டிலுள்ள 28 பாடல்களுமே புகழ்பெற்ற பாடலாசிரியர்களால் எழுதப்பட்டு என்னால் இசையமைக்கப்பட்டதாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X