2025 மே 19, திங்கட்கிழமை

சம்பத் வங்கி PickMe உடன் கைகோர்ப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏடிஎம் மய்யங்களில் இருந்து மீளப்பெறப்படுகின்ற பணத்தை நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டு வாயிலிலே ஒப்படைப்பதற்கு இடமளிக்கும் வகையில் PickMe Digital Mobility Solutions Lanka (PVT) Ltd நிறுவனத்துடன் பங்குடமையொன்றை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் சம்பத் வங்கி சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த வகையிலான ஒரு தீர்வு வங்கித் துறையில் இதற்கு முன் கிடைக்கப்பெற்றதில்லை. வாடிக்கையாளர்களின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள ஒரு வங்கி என்ற வகையில், இந்த முயற்சி காலத்தின் தேவையை நிவர்த்தி செய்கிறது. தற்போதைய ஊரடங்குச் சட்டத்தினால், இலங்கையில் பலரும் கையில் போதுமான பணம் இல்லாமல் அல்லல்படும் இத்தருணத்தில், இந்த தனித்துவமான தீர்வு அவர்களுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் பண விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள, அதே சமயம், வாடிக்கையாளர்களை கொவிட்-19 தொற்று அபாயத்திலிருந்தும் பாதுகாக்கிறது. மேலும், கூடுதல் நிவாரணமாக சம்பத் வங்கி இந்த சேவைக்கான வங்கிக் கட்டணத்தில் 50% விலக்களித்துள்ளது.

எந்தவொரு வாடிக்கையாளரும் தமக்கு கிடைக்க வேண்டிய பணத்தை தங்கள் வீட்டு வாயிலில் பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் தங்களுடைய Sampath Vishwa கணக்கு மற்றும் PickMe மொபைல் பயன்பாடு ஆகியவற்றின் உதவியுடன் மாத்திரம் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும். மிகவும் இலகுவான சில படிமுறைகளைப் பின்பற்றி, ஒரு 'Mobile Cash' பரிவர்த்தனையை வாடிக்கையாளர் உருவாக்கி, அதன் பின்னர் PickMe App இனுள் உள்நுழைந்து ' Flash ' இன் கீழ் 'I want to Receive ' என்பதைத் தேர்ந்தெடுத்து 'Cash from ATM' என்பதைக் கிளிக் செய்யவும். வாடிக்கையாளர் அதன் பின்னரே சம்பத் வங்கியிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட குறும் தகவல் செய்தியை (எஸ்எம்எஸ்) நியமிக்கப்பட்ட Piஉமஆந ஓட்டுனருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவர் பணத்தை வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் பத்திரமாக கொண்டு வந்து ஒப்படைப்பார். வெற்றிகரமாக பணம் மீளப்பெறப்பட்டு, ரசீது ஒன்றுடன் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சமயத்தில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாமல் சரியான தொகை பெறப்பட்டிருப்பதை வாடிக்கையாளர் உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர் ஓட்டுநருக்கு பணத்தைச் செலுத்தி அவரது சேவை தொடர்பான மதிப்பீட்டை வழங்கிய பிறகு, பரிவர்த்தனை முடிவுறுத்தப்படும்.

ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டால் அல்லது வழங்கப்பட்ட தொகை கோரப்பட்ட தொகையுடன் முரண்படுவதாக இருந்தால், வாடிக்கையாளர் 1331 மூலமாக இல் PickMe வாடிக்கையாளர் சேவையை அழைத்து அல்லது சம்பத் வங்கியின் வாடிக்கையாளர் சேவை துரித அழைப்பு இலக்கமான 0112303050 மூலமாகவோ முறைப்பாடு செய்து இதற்கு தீர்வு காண முடியும். இந்த செயல்முறையை விவரிக்கும் கூடுதல் விவரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களின் பட விளக்கத்தை https://www.sampath.lk/en/personal/electronic-banking/sampath-mobile-cashR+doorstep-cash-delivery மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

ஏடிஎம் மையங்களில் இருந்து பணத்தை மீளப்பெற்று இந்த சேவைக்கு உதவுகின்ற PickMe ஓட்டுநர்கள் இதற்கென விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், இது செயல்முறையின் கட்டுக்கோப்பினை உறுதி செய்கிறது. ஏடிஎம் மையங்களின் செயல்பாடுகள் தொடர்பில் ஓட்டுநர் ஒருவருக்கு சந்தேகம் இருப்பின், இது தொடர்பான இலகுவான படிமுறைகளை அவருக்கு விளக்கும் வகையில் சம்பத் ஏடிஎம் மையங்களில் விசேட அறிவுறுத்தல் ஸ்டிக்கர்கள் வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஓட்டுனர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை அங்கீகார குறியீட்டை தவறாக உள்ளீடு செய்தால் பரிவர்த்தனை தானாகவே முடக்கப்படும்.

இந்த சேவையை சம்பத் வங்கி வாடிக்கையாளர்கள் வாரம் முழுவதும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், தற்போது கொழும்பு 1 முதல் 15 வரை, அதனை அண்டியுள்ள புறநகர்ப் பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் புவியியல்ரீதியாக மேலும் பல பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் இந்த சேவை விஸ்தரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய ஊரடங்கு உத்தரவின் போது பணம் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தீர்வே இதுவரை அவர்களுக்;கு கிடைக்கப்பெறும் பாதுகாப்பான தெரிவாகும். சம்பத் வங்கியால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் ஏடிஎம் சேவையுடன் சேர்ந்து, இந்த கடினமான காலகட்டங்களில் இலங்கை மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக பணக் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை செய்வதை உறுதிப்படுத்த பல புத்தாக்கமான தீர்வுகளையும் வங்கி அறிமுகப்படுத்துகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X