2025 மே 19, திங்கட்கிழமை

சாரணர்கள் மத்தியில் காலை ஆகார பழக்கத்தை சமபோஷ ஊக்குவிப்பு

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இளம் சாரணர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 54ஆவது கொழும்பு மாவட்ட வருடாந்த சாரணர் ஜம்போரி நிகழ்வின் போது, ஆரோக்கியமான காலை ஆகார பழக்கத்தை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை சமபோஷ ஊக்குவித்திருந்தது. கடந்த ஒன்றரை வருட காலமாக சமபோஷ முன்னெடுத்து வரும் ஆரோக்கியமான காலை ஆகாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக இந்த ஊக்குவிப்புத் திட்டம் அமைந்திருந்தது. 

ஐந்து நாட்கள் இடம்பெற்ற சாரணர் ஜம்போரி நிகழ்வு, இரத்மலானை இந்துக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 45க்கும் அதிகமான பாடசாலைகளைச் சேர்ந்த 2,000 சாரணர்கள் இதில் பங்கேற்றனர். முதன் முறையாக 5 முதல் 7 வயதுக்குட்பட்ட இளம் சாரணர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.  

சமபோஷ ‘நற்பெறுமதிகள்’ தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் பதிவுகளை பதியும் சுவர் பகுதி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சாரணர்கள் தமது பெறுமதி வாய்ந்த கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். சமபோஷ போஷாக்கு நிபுணர்களினால் வழங்கப்பட்ட காலை ஆகார விளக்கத்தில் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர். 

ஜம்போரி நிகழ்வில் சாரணர்களிடமிருந்து சமபல ஆரோக்கியமான காலை ஆகாரம் தயாரிப்பு தொடர்பான போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிக்கான மத்தியஸ்தத்தை இலங்கை சமையல் நிபுணர் சம்மேளனத்தின் புகழ்பெற்ற நான்கு சமையல் நிபுணர்கள் வழங்கியிருந்தனர். நிபுணர் ஜெராட் மென்டிஸ், நிபுணர் திலக் செனெவிரட்ன, நிபுணர் மாதவ வீரபதன மற்றும் நிபுணர் விமல் விமலகுணரட்ன ஆகியோர் இதில் அடங்கியிருந்தனர். புரதம், விற்றமின்கள், காபோவைதரேற்று போன்ற சகல முக்கிய போஷாக்கு அங்கங்களையும் கொண்டதாக இந்த காலை அமைந்திருக்க வேண்டும் என சாரணர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. சமபோஷ இதில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டிருந்தது. 

காலை ஆகார தயாரிப்பு போட்டியில் சிறந்த 10 அணிகள் தெரிவு செய்யப்பட்டு, அதில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன. முதல் மூன்று இடங்களை முறையே அல்-ஹிதாயா கல்லூரி, வெஸ்லி கல்லூரி மற்றும் சென்.அன்ரியுஸ் கல்லூரி ஆகியன சுவீகரித்தன. ஒவ்வொரு அங்கத்தவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X