Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 10 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
HNB Finance தமது நிலையான நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வு அணுகுமுறையின் ஒரு பிரதான அங்கமான சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வீதி சமிக்ஞை பலகைகளை அன்பளிப்பு செய்தது. நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதி மற்றும் அந்தப் பகுதியிலுள்ள பல்வேறு இடங்களில் பாதசாரிகள் மற்றும் சாரதிகளின் கவனத்திற்காக இந்த வீதி சமிக்ஞை பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
HNB Financeஇன் நிலையான நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வு வேலைத் திட்டத்தின் வழிகாட்டி வேலைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வீதி சமிக்ஞை பலகை அன்பளிப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்காக HNB Financeஇன் பிரதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான டபிள்யூ.எஸ்.பி. அரங்கல, நுகேகொடை மிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மார்லன் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டதோடு இந்த நிகழ்விற்கு HNB Financeஇன் விற்பனை பிரதானி உதார குணசிங்க, சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் திலினி திஸாநாயக்க, ஊடக முகாமையாளர் மஞ்சுள பிரபாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வழிகாட்டி வேலைத் திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வீதி சமிக்ஞை பலகைகள் வழங்கும் வேலைத் திட்டமானது யாழ்ப்பாணம், கதிர்காமம், நுவரெலியா, கண்டி, குருணாகல் ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்வதற்கு HNB Finance ஆயத்தமாகி வருகின்றது.
“அதிகரித்து வரும் விபத்துக்கள், வாகன நெரிசல்களைக் குறைப்பதற்காக பொலிஸார் பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர். நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வுக்கு முக்கிய இடத்தை பெற்றுக் கொடுக்கும் நிறுவனம் என்ற வகையில் HNB Finance நிறுவனம் இந்த சிறந்த நடவடிக்கைக்காக பங்களிப்பை பெற்றுக் கொடுப்பது இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன் சமூகத்தை வலுவூட்டுவதும் எமது நிலையான நிறுவன ரீதியான உட்பார்வையின் பிரதான அங்கம் என்பதால் சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக நிலைத்திருப்பதற்காக இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது” என HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்துள்ளார்.
HNB FINANCE LIMITED நிறுவனம் 2000ஆம் ஆண்டு, பதிவு செய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நிதிக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட பலமான நிதி நிறுவனமாகும். என்பதுடன் நிதித் துறையில் சர்வதேச விருதினை வென்ற HNB Finance நிறுவனத்திற்கு 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையங்களின் ஊடாக நாடுமுழுவதிலும் தமது சேவையை வழங்கி வருவதோடு HNB Finance சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இணையத்தளத்தின் மூலம் நிதி உதவிகளை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது. லீசிங், வர்த்தகக் கடன், நுண்நிதிக் கடன், தங்கக் கடன், சிறுவர்களுக்கான நிலையான வைப்பு, வீட்டுக் கடன், மேற்படிப்பிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் HNB Finance நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago