Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 10 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வசதிகள் படைத்த குடும்பத்தாருக்கு நிவாரணமளிக்கும் வகையில் ஜோன் கீல்ஸ் குரூப் தனது ஜோன் கீல்ஸ் மையம், கீல்ஸ் சுப்பர்மார்கெட்ஸ் மற்றும் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் (எலிபன்ட் ஹவுஸ்) ஆகியவற்றுடன் கைகோர்த்து 10,000 அத்தியாவசிய உணவுப் பொதிகளை நாட்டின் இனங்காணப்பட்ட பகுதிகளில் விநியோகித்திருந்தது.
இந்த இடர் நிறைந்த காலப்பகுதியில் இலங்கையர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு பங்களிப்புச் செய்யும் வகையில், மேல் மாகாணத்தின் அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளரினால் இனங்காணப்பட்ட பகுதிகளான கொம்பனித் தெரு, திம்பிரிகஸ்யாய, மட்டக்குளி, கொலன்னாவ, ஒபேசேகரபுர, கடுவளை, ரனால மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பின்தங்கிய மக்களுக்கு இலவசமாக இந்த அத்தியாவசிய பொருட்களை விநியோகித்திருந்தது.
மேற்படி திட்டத்துக்கு மேலாக, பிரதேசத்தின் அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க, கடுவளை நகர சபை பகுதி மற்றும் ரனால தொழிற்சாலையை அண்மித்த பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானமீட்டும் 500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை 2020 மார்ச் 29ஆம் திகதி சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் விநியோகித்திருந்தது.
நாட்டில் நிலவும் நோய்த் தொற்று நிலை காரணமாக, பலதரப்பட்ட மக்களுக்கு வருமானமிழப்புக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. நாட்கூலியில் தமது குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் குடும்பங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கக்கூடிய புத்தாக்கமான வழிமுறைகள் தொடர்பில் ஜோன் கீல்ஸ் குரூப் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த சவால் நிறைந்த காலப்பகுதியில் தேசத்துக்கும் பொது மக்களுக்கும் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜோன் கீல்ஸ் மையம், கீல்ஸ் சுப்பர்மார்கெட்ஸ் மற்றும் எலிபன்ட் ஹவுஸ் ஆகியன அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயலாற்றும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago