Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொஃப்ட்லொஜிக் லைஃப் நிறுவனத்தின், மாற்று விநியோக அலைவரிசையில் சிறப்பாகச் செயற்படும் ஊழியர்களை அங்கிகரிக்கும் முகமாக, கொழும்பு சினமன் கிராண்ட் ஹொட்டலில், ‘மாற்று விற்பனை அலைவரிசை மாநாடு 2020’ அண்மையில் நடைபெற்றது.
‘ஒரே இலக்கு’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த இரவு நேர அங்கிகார நிகழ்வானது, மாற்று அலைவரிசையின் சிறந்த ஊழியர்களது சாதனைகளுக்காக, ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
அத்துடன், அவர்களது இடைவிடாத, உணர்வு பூர்வமான முயற்சிகளால் மூலோபாய வர்த்தகப் பிரிவானது, மூன்று பில்லியன் ரூபாயை 2019ஆம் ஆண்டு இறுதியில் மொத்தம் எழுதப்பட்ட காப்பீடாகவும் (GWP), வெறும் மூன்று ஆண்டுகளில் 82% மூலோபாய வளர்ச்சியையும் (YOY) பெற்றுக் கொண்டுள்ளது.
இன்று, இலங்கையிலுள்ள ஏழு காப்புறுதி நிறுவனங்களை விட, சொஃப்ட்லொஜிக் லைஃபின் மாற்று விநியோக அலைவரியானது முன்னணியில் திகழ்கின்றது.
இந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு சொஃப்ட்லொஜிக் லைஃபின் முகாமைத்துவப் பணிப்பாளர் இப்திகர் அஹமட், நிறைவேற்று பணிப்பாளர் சூலா ஹெட்டியாராச்சி, சொஃப்ட்லொஜிக் லைஃப் நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள், சொஃப்ட்லொஜிக் லைஃப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தத் தொடக்க மாற்று விநியோக அலைவரிசை மாநாட்டில் வெற்றியாளர்களிடையே மொத்தம் 29 விருதுகள் ஏழு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன. MDRT (Million Dollar Round Table), Top of The Table (TOT) வெற்றியாளர், சிறந்த MDRT திறமையாளர், அதி கூடிய GWP வெற்றியாளர் (வியாபார ஆலோசகர் பிரிவு), அதி கூடிய GWP வெற்றியாளர் ஆகியோர் பெரிய விருது பிரிவின் வெற்றியாளர்களும் மாற்று விநியோக அலைவரிசையின் 2019 MDRT வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025