Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொனிட் கெப் தனியார் நிறுவனத்துக்கு அண்மையில் ISO 90001:2008 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. ISO 90001:2008 தரச் சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது வாடகை வாகனச் சேவை என்ற பெருமையை இதன் மூலம் சொனிட் கெப் நிறுவனம் பெற்றுள்ளது. Ind-Expo Certification Limited நிறுவனத்திடமிருந்தே ISO 90001 :2008 தரச் சான்றிதழை சொனிட் கெப் நிறுவனம் பெற்றுக் கொண்டது.
தேசமான்ய எம்.எம்.ஜே பண்டார அவர்களின் எண்ணக்கருவொன்றுக்கு அமைய 2011ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சொனிட் கெப் நிறுவனம் இலங்கை வாடகை வாகனச் சேவைக்கு புதியதொரு பரிமாணத்தை தோற்றுவித்து வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்திலான சேவையை மிகக் குறைந்த விலையில் வழங்கியதன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபல்யமடைந்தது.
சொனிட் நிறுவனம் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு பெருமிதம் கொள்ளக்கூடிய வகையிலான சுயதொழில் வாய்ப்பை தோற்றுவித்துள்ளமை இன்னொரு சிறப்பம்சமாகும். வாரத்தின் 07 நாட்களிலும் 24 மணித்தியாலங்கள் பூராவும் சொனிட் வாடகை வாகனச் சேவை இயங்குவதோடு தமக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சொனிட் கெப் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வாடகை வாகனமொன்றை தருவித்துக்கொள்ள கூடிய வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சீருடை அணிந்த ஒழுக்கமான சாரதிகள், மறந்து விட்டுச் செல்கின்ற பொருட்களை மீள வாடிக்கையாளர்களுக்கு கையளிக்கும் செயற்பாடு, நம்பிக்கை மிக்க சேவை, பாதுகாப்பு, சொகுசுடன் கூடிய வசதிகள் மற்றும் இலங்கையில் மிகக் குறைந்த கட்டணத்தில் தமது தேவைக்கேற்ப வாடகை வாகனச் சேவை வசதிகள் பலவற்றை சொனிட் கெப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
‘வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை நியாயமான விலையில் வழங்கும் நோக்கத்துடன் எமது சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு நாம் எதிர்பாரத்துள்ளோம்.’ தமது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சொனிட் கெப் தனியார் நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய எம்.எம்.ஜே பண்டார தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago