2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சியெட் இலங்கை சுற்றுலாவில் ஏற்றுமதி வாடிக்கையாளர்கள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வரையறுக்கப்பட்ட சியெட் நிறுவனத்துக்கும் களனி டயர்ஸ் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்துக்கும் இடையில் கூட்டு முயற்சியாகச் செயற்படும் சியெட் ஸ்ரீ லங்கா நிறுவனம் அண்மையில் தனது கடல் கடந்த நாடுகளைச் சேர்ந்த மூன்று நாடுகளின் வாடிக்கையாளர்களை ஐந்து நாட்கள் விஜயமாக இலங்கைக்கு அழைத்து வந்தது.

விநியோகஸ்தர்களுக்கு இடையிலான ஊக்குவிப்பாக இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் உள்ள டக்ஸ்டெரா (ள) தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் ஷிவி கல்ரா தலைமையிலான விற்பனை குழு மற்றும் பிலிப்பைன்ஸ் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த டக்ஸ்டெரா வாடிக்கையாளர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.

சியெட் ஸ்ரீ லங்காவின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்களை இந்தக் குழு சந்தித்தது. அத்தோடு கம்பனியின் களனி உற்பத்தி நிலையத்தையும் அவர்கள் சுற்றிப் பார்வையிட்டனர். நீர்கொழும்பு பின்னவெல, கந்தலம, சீகிரியா, மின்னேரியா, பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.'சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் சியெட்டின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளாகும்.

குறிப்பாக இலகு டயர் பிரிவில் இவை முக்கிய இடம்பிடித்துள்ளன' என்று சியெட் லங்கா முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய் காம்பீர் கூறினார். 'பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு டிரக் மற்றும் ரேடியல் டயர்களை ஏற்றுமதி செய்வதில் நாம் தற்போது கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம். அந்த நாடுகளுக்கான எமது ஏற்றுமதி தொகையை அதிகரிக்கும் வகையிலேயே நாம் இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்' என கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X