2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிறந்த நிறுவனம் JAT ஹோல்டிங்ஸ்

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

Great Place to Work® (GPTW) நிறுவனத்தின் 'நாட்டில் பணியாற்றுவதற்கு மிகச் சிறந்த 25 கம்பனிகள்' இல் ஒன்றாக JAT ஹோல்டிங்ஸ் அங்கிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

'மிக உன்னதமான இந்த அங்கிகாரம் கிடைக்கப்பெற்றதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை, பணியாற்றுவதற்கு சிறந்ததொரு இடமாக எமது நிறுவனத்தை அங்கிகரித்து ஏற்றுக் கொண்டிருக்கின்றமைக்காக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இலங்கையிலே 'முதன்னிலை தெரிவுக்குரிய 20 தொழில் வழங்குநர்கள்' (Top 20 Employers of Choice)  என்பதில் ஒரு நிறுவனமாக இடம்பிடிப்பதே எமது தூரநோக்காக இருந்தது.

இந்நிலையில், இவ்வாறான ஒரு அந்தஸ்தை அடைந்து கொள்வதற்காக முயற்சி செய்கின்ற இலங்கையிலுள்ள 25 முதன்னிலை கம்பனிகளுள் ஒன்று என்ற மேலும் உயர்ந்ததொரு நிலையை இந்தத் தரப்படுத்தலின் ஊடாக நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்' என்று JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஈலியன் குணவர்தன தெரிவித்தார்.  

Great Place to Work®  என்பது, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ ஆலோசனை மையமாக திகழ்கின்ற அதேநேரம், பணியிட உருவமைப்பு மாற்றம்சார் துறையில் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. ஸ்திரமானத் தன்மையுள்ள மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் முன்னுதாரணமான தொழிற்பாடுகளை வெளிப்படுத்தும் விதத்தில் முன்மாதிரியாக திகழும் வணிக மாதிரிகளை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டும்  நோக்கில் பரந்த அடிப்படையிலான கருத்துக் கணிப்புக்களையும் இந்த மையம் மேற்கொண்டுள்ளது.

பெறுமானங்களை கடைப்பிடிக்கின்றமைக்காகவும் மூலக்கூறுகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி போதிக்கின்றமைக்காகவும் JAT ஹோல்டிங்ஸ் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இது, ஊழியர்களுக்கு பாராட்டுதல் உணர்வு, உணர்ச்சிகரமான திருப்தி போன்றவற்றை வழங்குகின்றது. அதுமட்டுமன்றி, தமது ஊழியர்கள் தொழில்சார் மற்றும் தனிப்பட்ட சாதனைகளை நிலைநாட்டுவதற்கு விருப்பத்தோடு உதவி புரிகின்ற கம்பனி என்ற அடிப்படையிலும் இந்த அங்கிகாரம் கிடைத்திருக்கின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X