2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிறப்பம்சங்களைக் கொண்டு ikman.lk மறுசீரமைக்கப்பட்டுள்ளது

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொழுபோக்கு தொடக்கம் பொருள் கொள்வனவு மற்றும் தொழில்வாய்ப்பு போன்ற அனைத்துத் தேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் தற்போது இணையத்தளத்தையே நம்பியிருக்கின்றனர். இன்றைய டிஜிடல் புரட்சி மற்றும் அதிகரித்து வரும் சமூக ஒன்லைன் ஊடகங்கள் என்பனவற்றின் ஊடாக தமது தகவல் தொழில்நுட்பத் தேவைகளை இணையத்தளத்தின் மூலம் பூர்த்தி செய்து கொள்கின்றனர். வேலைவாய்ப்புடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களை இனங்கண்டு ikman.lk தொழில் வாய்ப்புக்களைத் தேடுவோருக்காக அதன் வேலைவாய்ப்புப் பிரிவினையும் சீரமைத்துள்ளது. இது தற்பொழுது வேலை வாய்ப்புக்களைத் தேடுவோர், ஒரு வெற்றிடத்திற்காக விண்ணப்பிக்கும் பொழுது தமது தகைமைத் திரட்டுகளை இணைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்துள்ளது.

ikman.lk இல் காணப்படும் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் தற்பொழுது ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலை முகாமைத்துவம் வரை விருத்தியடைந்துள்ளது. மேலும், இது பலதரப்பட்ட தொழில் வாய்ப்புக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ikman.lk ஆனது, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களில் (SME) இருந்து மாத்திரமன்றி, உயர்மட்ட நிறுவன வெற்றிடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன்மூலம் வேலைவாய்ப்புகளை தேடுவோருக்கு பலதரப்பட்ட துறைகளிலும் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வாய்புகளை வழங்குகிறது. இணையத்தள வடிவமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப முகாமையாளர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை நிறைவேற்று அதிகாரிகள், சந்தைப்படுத்தல் அதிகாரிகள், சந்தைப்படுத்தல் முகாமையாளர்கள், சந்தைப்படுத்தல் துறை வர்த்தக முத்திரை முகாமையாளர்கள், நிதித்துறை கணக்கியல் அதிகாரிகள் மற்றும் கணக்கியல் முகாமையாளர்கள் போன்றனவே தற்காலத்தில் காணப்படும் தொழில்வாய்ப்பு வெற்றிடங்களாகும். அழைப்பு நிலைய அதிகாரிகள், தாதிமார்கள் மற்றும் மேலும் பல தொழில் வாய்ப்புகளுக்கு பெருமளவில் வெற்றிடங்கள் நிலவுகின்றன.

ikman.lk போன்ற ஒன்லைன் வாயில்களின் (Portal) ஊடாக தொழில்வாய்ப்புக்களைத் தேடுவோருக்கு தமது பணியை மிகவும் சுலபமாக்கிக் கொடுத்துள்ளது. அதேவேளை, பலதரப்பட்ட வேலைவாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்கள் தோன்றுவதுடன், தமது வீட்டில் அல்லது காரியாலயத்தில் இருந்தவாறே இப்பணியை செய்யக்கூடிய நிலையும் காணப்படுகின்றது. விண்ணப்பதாரியின் தகைமைத் திரட்டுகளை இணைக்கும் இந்தப் புதிய அம்சமானது, தொழில்வாய்புகளைத் தேடுவோருக்கு தமது வேலையை இலகுபடுத்தியுள்ளது. தொழில் வழங்குநர்களுக்கும் ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டை துரிதப்படுத்தியுள்ளது.

ஒன்லைன் வெற்றிட விளம்பரங்களானது, தொழில் வாய்ப்புகளை தேடுவோர் மற்றும் வழங்குநர் ஆகிய இரு பாலாருக்குமே பயனுள்ளதும் வசதியானதுமாகும். மைஅயn.டம, தினந்தோறும் பெருந்தொகையான தொழில் வெற்றிடங்களை விளம்பரப்படுத்துகிறது. இதன்மூலம் தொழில் வாய்ப்புக்களை தேடுவோர், நிறுவனங்கள் மற்றும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய விரும்பும் தனிநபர்கள் போன்றோரின் ஈடுபாட்டை சாதாரண முறையிலும் பார்க்க ஐந்து மடங்காக அதிகரிக்கச் செய்கிறது.

மேற்கூறியவாறு தொழில் தேடுவோர் மற்றும் வேலை வழங்குநர் ஆகியோரின் ஈடுபாட்டின் அதிகரிப்பு காரணமாக, இந்தத் துறையில் ikman.lk இன் பயன்பாடு குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ளது. தொழில் தேடுவோருக்கு மிகச் சிறந்த வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் அதேவேளை, தொழில் வழங்குநருக்கு துரிதமான, சிரமங்களற்ற, ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் முறை ஒன்றை ikman.lk ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்காக ஒருவர் நாடவேண்டிய ஒரேயொரு இணையத்தளமாக ikman.lk பிரசித்தி பெற்றுக் காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X