2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு JKOAகௌரவிப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஒடோமேஷன் (பிரைவெட்) லிமிட்டட் (JKOA) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட அதன் வருடாந்த தொழில்நுட்ப சேவை வழங்குநர் வலையமைப்பு ஒன்றுகூடல் நிகழ்வின் போது, கடந்த ஆண்டில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த தொழில்நுட்பவியலாளர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஹில்டன் ரெசிடென்சிஸில் அண்மையில் நடைபெற்றது.

நாடு முழுவதையும் சேர்ந்த வலைமைப்பில் காணப்படும் இந்த தொழில்நுட்பவியலாளர்கள் (JKOA) இன் அலுவலக தன்னியக்க தீர்வுகளுக்கான சேவைகளை வழங்கி வருகின்றனர். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அங்கத்துவ அமைப்பாக துமுழுயு திகழ்கிறது.

அலுவலக தன்னியக்க தீர்வுகளை வழங்குவதில் சந்தை முன்னோடியான, (JKOA) இன் சேவை வழங்கல்களில், Samsung, Toshiba மற்றும்Hitachi போன்ற பல புகழ்பெற்ற வர்த்தக நாமங்களும் உள்ளடங்கியுள்ளன. இதன் சேவை வழங்கல்களில், உத்தரவாதம் மற்றும் உத்தரவாதத்துக்கு பின்னரான உதவி, செயற்படுத்தல் கட்டமைப்பு பதிவு மற்றும் செம்மையாக்கல் மற்றும் வன்பொருள் மற்றும் உத்தரவாத நீடிப்பு மேம்படுத்தல்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன.

இந்த சேவைகள் நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி, துமுழுயு இன் தொழில்நுட்ப வலையமைப்பின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்றன. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் உதவி பதில் தலைவரும், JKOA இன் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியுமான மலிக் எட்வின் கருத்துத் தெரிவிக்கையில், 'கடந்த ஆண்டில் உங்கள் பெறுபேறுகள் சிறப்பாக அமைந்திருந்தன.

துறையில் JKOA ஐ உயர்ந்த நிலையில் தக்க வைத்துக் கொள்வதற்கு இது மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்கும் இந்த சிறந்த செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுங்கள் என நான் கோருகிறேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X