2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக் கடந்த ஆண்டின் கஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.8 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்து, 186,288ஆக பதிவாகியிருந்தது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை புள்ளிவிவரங்கள் அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 16 சதவீதத்தால் அதிகரித்து 1,359,906 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவிலிருந்து பெருமளவானோர் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன், 27,517 பேர் சுற்றுலாப்பயணிகளாக வருகை தந்திருந்தனர். இந்தியாவிலிருந்து 24,418 பேர் இலங்கைக்கு ஓகஸ்ட் மாதத்தில் வருகை தந்திருந்ததுடன், முதல் எட்டு மாதத்தில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து 445,667 பேர் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர்.

2016இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் தெற்காசியாவிலிருந்து 320,110 சுற்றுலாப்பயணிகளும், கிழக்கு ஆசியாவிலிருந்து 291,483 பேரும் சுற்றுலாப்பயணிகளாக வருகை தந்திருந்தன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X