Editorial / 2020 ஜூன் 13 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தொழிற்பயிற்சி, சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மை, அபிவிருத்தி ஆகியவை உள்ளடங்கிய மூன்று நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக, இலங்கைக்கு 11 மில்லியன் யூரோவை வழங்க, ஜேர்மனி முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இரண்டு நாடுகளின் அரச அதிகாரிகள் கைச்சாத்திட்டனர்.

தொழிற்பயிற்சித் திட்டத்தை மேம்படுத்துவதற்காக ஏழு மில்லியன் யூரோ ஒதுக்கப்படும் என்பதுடன், இளைஞர், யுவதிகளுக்கு அதிகளவு கேள்வி நிலவும் துறைகளில் கூட்டாண்மை தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும். சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறையின் அபிவிருத்திக்காக, 3.5 மில்லியன் யூரோ வழங்கப்படும் என்பதுடன், உலக சந்தையில் இலங்கையின் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் எதிர்கொள்ளும் பாரிய தடைகளைத் தகர்ப்பதற்கு உதவிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
புதிய திட்டங்களுக்குத் தயார்படுத்துவதற்கு அவசியமான நிதி, சிறியளவிலான திட்டங்களுக்கு நிதியளிப்பது, ஜேர்மனிய நிபுணர்களுக்கு நிதியளிப்பது போன்றவற்றுக்காக 0.5 மில்லியன் யூரோ பயன்படுத்தப்படும். ஜேர்மனிய அரசாங்கத்தின் GIZ இனால் மேற்படி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
பல்வேறு இடையீடுகளினூடாக, நாட்டின் தொழிற்பயிற்சி, சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சியாண்மை போன்ற துறைகளுக்குத் தொழில்நுட்ப உதவிகளை ஜேர்மனிய அரசாங்கம் வழங்கிய வண்ணமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago