Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி YouTube தளத்தை அணுகிட வரையரையற்ற டேட்டாவை வழங்கும் இலங்கையின் முதல் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மொபைல் டேடாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “4G Video Blaster” மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் டேடா பாவனையை பற்றிய கவலைகள் இன்றி விரும்பிய வகையில் YouTubeஐ அனுபவித்திட முடியும். டயலொக் வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்கு தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“4G Video Blaster“ திட்டத்தை ரூ.249/- க்கு (வரிகள் உள்ளடங்களாக) பெற்றுக்கொள்ள முடியும். 4G திறன்பேசிகளில் SD (Standard Definition) தரத்தை வழங்கும் வரையறையற்ற வீடியோ சேவை 30 நாள்களுக்கு செல்லுபடியாகும். மேலும், ‘4G Video Blaster’ ஏனைய Apps, இன்டர்நெட் பாவனைகளுக்கு 3.5GB டேட்டாவை இலவசமாக வழங்குகின்றது. அதன்படி anytime, night time, 4G போனஸ் டேட்டா ஆகிய அனைத்தையும் இந்த இலவச டேடா உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘4G Video Blaster’ ஐ செயற்படுத்திக்கொள்ள உங்களுக்கு Dialog 4G SIM அட்டையுடன் (முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு) 4G அலைபேசி அவசியமாவதுடன் இந்தத் திட்டத்ைத MyDialog App ஊடாகவும் www.dialog.lk/data எனும் இணையத்தளத்துக்குச் செல்வதன் மூலமும் #678# டயல் செய்வதன் மூலமும் அல்லது ரூ. 249/- ஐ ரீலோட் (முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள்) செய்வதன் மூலமும் செயற்படுத்திக்கொள்ள முடியும். மேலும் 4G திறன்பேசிகளில் செயற்படுத்தப்பட்டுள்ள Unlimited Video சேவையினை SD Video தரத்தில் பார்வையிட முடியும்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி கலாநிதி ரெய்னர் டொட்ஸ்மான் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “2020ஆம் ஆண்டில் புதிய தசாப்தத்தின் தொடக்கத்தில் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களாகிய நாம் இலங்கையின் வீடியோ வலையமைப்பில் சிறந்த வீடியோ புரட்சியை தொடங்கியுள்ளோம். இதற்கமைய, நமது ‘4G Video Blaster’ ஆனது முதற்தடவையாக நிர்ணயிக்கப்பட்ட - மட்டுப்படுத்தப்பட்ட YouTube கட்டணத்தை அறிமுகப்படுத்துகின்றது. எனவே, எமது வாடிக்கையாளர்கள் தமது டேடா மிகுதிபற்றி கவலைகள் இன்றி விரும்பிய வகையில் தமக்கு விருப்பமான வீடியோக்களை பார்வையிட முடியும். எமது சமீபத்திய அறிமுகமான VIU app ஊடாக வரையறையற்ற Live TV மற்றும் Video-on-Demand சேவையை டயலொக் வலையமைப்பில் கையடக்க தொலைபேசியின் ஊடாக, அன்ரோய்ட் TV இல் உள்ள ViU App ஊடாக டேடா கட்டணங்கள் இன்றி பார்வையிடுவதற்கான வாய்ப்ைப இந்தப் பக்கேஜ் வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
30 minute ago
33 minute ago