2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

டோடல் ஃபிரான்ஸ் இலங்கையுடன் உடன்படிக்கை

Gavitha   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கிழக்குக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, டோடல் ஃபிரான்ஸ் நிறுவனத்துக்கும் இலங்கைக்குமிடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இதன் பிரகாரம் முதற்கட்ட இனங்காணல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆரம்ப கட்ட முதலீட்டு தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமைந்துள்ளதாகவும், இந்தத் தொகை ஆரம்பக் கட்ட இனங்காணல் செயற்பாடுகளைத் தொடர்ந்து படிப்படியாக மேற்கொள்ளப்படும் என பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

டோடல் நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், திரட்டப்படும் தரவுகளின் உரிமையாண்மையை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும்.

இதற்கு முன்னர் மன்னார் கடல் பரப்பு பகுதியில் எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சி செயற்பாடுகளை இந்தியாவின் கெயார்ன் நிறுவனம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X