Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2023 மே 22 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், தேசிய விற்பனை விருதுகள் 2022 இல் உயர் விற்பனை கௌரவிப்புகளை சுவீகரித்திருந்தது. இந்த நிகழ்வு மொனார்ச் இம்பீரியலில் அண்மையில் இடம்பெற்றது. பாங்கசூரன்ஸ் விநியோகப் பிரிவுக்காக அதிகளவு விருதுகளை நிறுவனம் பெற்றுக் கொண்டது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் மூலமாக இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
தேசிய விற்பனை முகாமையாளர் பிரிவில் வெற்றியாளராக யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் பிரிவின் உதவி பிரதித் தலைவர் தமித விக்ரமதுங்க தெரிவு செய்யப்பட்டிருந்தார். பாங்கசூரன்ஸ் வலய முகாமையாளரான ஹர்ஷன பெர்னான்டோ, ஆயுள் காப்புறுதி – பிராந்திய முகாமையாளர்கள் பிரிவில் வெள்ளி விருதை சுவீகரித்திருந்தார். ஆயுள் காப்புறுதி - விற்பனை மேற்பார்வையாளர் பிரிவில் வெண்கல விருது, நிமேஷ ஜயசேகரவுக்கு வழங்கப்பட்டதுடன், ஆயுள் காப்புறுதி – முன்கள செயற்பாட்டாளர்கள் பிரிவில் சண்முகம் மேனகா வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பாங்கசூரன்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி விஷாந்த் விஜேசிங்க குறிப்பிடுகையில், வெற்றியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தை பாராட்டியிருந்தார். சேவைச் சிறப்பு தொடர்பில் அவர்கள் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தமையினூடாக, பெருமளவில் அவர்களால் வெற்றிகரமாக இயங்க முடிந்தது. தேசிய விற்பனை செயலணியினரின் நாட்காட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில், அவர்களின் சாதனைகள் கௌரவிக்கப்பட்டுள்ளமையினூடாக, நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் சிறந்த பயிற்சிகள் மற்றும் நிபுணத்துவ விருத்தி போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனூடாக அவர்களால் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கக்கூடியதாகவுள்ளது என்றார்.
வியாபாரங்களை மேம்படுத்துவது மற்றும் தேசிய பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கும் முன்னணி செயலணியினராக சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்தவர்களை திகழச் செய்யும் SLIM இன் நடவடிக்கைகளில் தேசிய விற்பனை விருதுகளும் முக்கிய அங்கம் பெறுகின்றது. சர்வதேச நியமங்களுக்கமைய விற்பனை நிபுணர்களை கௌரவிப்பது நிறுவனத்தின் நோக்கமாக அமைந்துள்ளதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் மிகச் சிறந்த விருதுகள் வழங்கும் திட்டமாக கொண்டிருப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது.
20க்கும் அதிகமான துறைகளைச் சேர்ந்த சிறந்த செயற்பாட்டாளர்களை இனங்கண்டு அவர்களை கௌரவித்து வெகுமதியளிக்கும் வகையில் தேசிய விற்பனை விருதுகள் அமைந்துள்ளது. தனிநபர்களுக்கு தமது வினைத்திறன்களின் பிரகாரம் தமது நிறுவனங்களினூடாக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. போட்டியின் ஒவ்வொரு பிரிவும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய விருதுகளைக் கொண்டுள்ளதுடன், தேசிய மற்றும் பிராந்திய விற்பனை முகாமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. சுயாதீனமான நடுவர் குழாமைக் கொண்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் நடுவர் குழுவில் அடங்கியிருப்பர்.
23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago