2025 டிசெம்பர் 06, சனிக்கிழமை

தென் எலியகந்த குன்று ஏற்றம் 2023 பந்தயம் பூர்த்தி

S.Sekar   / 2023 மார்ச் 15 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சதர்ன் மோட்டார் விளையாட்டுக் கழகத்தினால் (SMSC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 27ஆவது எலியகந்த குன்று ஏற்றம், அண்மையில் மாத்தறையில் பிரவுண்ஸ் ஹில்லில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, இந்நிகழ்வுக்கு பிரதான அனுசரணை வழங்கியிருந்தது. நாட்டின் சிறந்த சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் வீரர்களுக்கான பந்தயமாக இது அமைந்திருந்தது.

கடந்த 26 வருட காலமாக SMSC இன் பிரதான நிகழ்வாக எலியகந்த குன்று ஏற்றம் அமைந்திருந்ததுடன், நாடு முழுவதையும் சேர்ந்த மோட்டார் பந்தய வீரர்களை தொடர்ந்தும் கவரும் வகையில் அமைந்துள்ளது. எலியகந்தயிலுள்ள 540 மீற்றர் பந்தயத்திடல், சவால்கள் நிறைந்ததாகவும், சாரதிகளுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தி புதிய சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பளிப்பதாகவும் அமைந்துள்ளது.

சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டிகளின் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்துவதாக தென் எலியகந்த குன்று ஏற்றம் 2023 அமைந்திருந்தது. 3500 CC வரையான SL GT கார்கள் பிரிவில் வேகமான நேரத்தைப் பதிவு செய்து சிறந்த சாரதிக்கான விருதை உஷான் பெரேரா பெற்றுக் கொண்டதுடன், 32.659 செக்கன்களில் இந்தத் தூரத்தைப் பூர்த்தி செய்திருந்தார். மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் சங்கீத் சூரியகே தமது Super Motard 450cc இல் 33.439 தூரத்தைக் கடந்து புதிய சாதனையை படைத்திருந்தார். அவர் சிறந்த மோட்டார் சைக்கிளோட்டிக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.

SMSC உடனான SLT-MOBITEL இன் பங்காண்மை என்பது, எலியகந்த குன்று ஏற்றத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்வதற்கு உதவியாக அமைந்திருந்ததுடன், அதிகளவு எதிர்பார்ப்புகளைப் பெற்ற மோட்டார்ப் பந்தய நிகழ்வாக திகழச் செய்துள்ளது. 26 வருட கால வரலாற்றுடன் எலியகந்த குன்று ஏற்றம் என்பது, நாட்டில் காணப்படும் பிரபல்யம் பெற்ற பந்தய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

ரேசிங் சம்பியன்ஷிப் தொடர்பில் தொடர்ச்சியான அனுசரணையுடன், SLT-MOBITEL இனால் புதிய தலைமுறை ரசிகர்களை தொடர்புபடுத்தி அதிகளவு ஈடுபாட்டுடனான அனுபவங்களை ஏற்படுத்தப்படுகின்றது. அதிவேக ஃபைபர் புரோட்பான்ட் இணைப்புகளுடன், வேகமான இணையத் தீர்வுகளையும் வழங்கும் SLT-MOBITEL இன் தலைமைத்துவத்தினூடாக, ஹோம் மற்றும் மொபைல் பாவனையாளர்களுக்கு, வேகம் மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் தங்கியுள்ள மோட்டார் பந்தய சமூகத்துடனும், உள்நாட்டு விளையாட்டுப் பிரிவுடனும் தொடர்பை ஏற்படுத்த உதவியாக அமைந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X