2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

தர மேம்பாட்டு திட்டங்களுக்காக சியெட் களனிக்கு தங்க விருதுகள்

Freelancer   / 2025 ஜூன் 23 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருடம் நடத்தப்பட்ட தர மேம்பாட்டுத் திட்டங்களுக்கான (QIPs) தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் மாநாட்டில் (NCQP 2025) சியெட் களனி ஹோல்டிங்ஸ் ஆனது வியக்கத்தக்க வகையில் 17 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, இது 2024 ஆம் ஆண்டிற்கான இதே நிகழ்வில் நிறுவனம் வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, சியெட் களனி இந்த ஆண்டு விருதுகளுக்காக சமர்ப்பித்த 17 திட்டங்களில் இரண்டு உற்பத்தி அல்லாத QIP களின் முடிவுகளைச் சேர்த்து, இரண்டிற்கும் தங்கத்தை வென்றது. மேலதிகமாக, தேசிய மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட கைசன் (சிறந்ததற்கான மாற்றம்) போட்டியில் சியெட் குழு இரண்டு சிறப்பு விருதுகளைப் பெற்றது.

'செயற்பாட்டு தரங்களை மேம்படுத்துவதற்கும் செயல்திறனை மேம்படுத்துவதற்குமான எமது உறுதிப்பாட்டை இந்த விருதுகளை விட சிறப்பாக அங்கீகரிக்க முடியாது,' என்று சியெட் களனியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான திரு. ஷமல் குணவர்தன தெரிவித்தார். 'சியெட் களனியானது ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள ஊழியர்களின் முழுமனதுடனான சிறப்பான பங்களிப்பின் மூலம், தரம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டில் தொடர்ந்து அளவுகோல்களை நிர்ணயித்து வருவதுடன் தொழில்துறையில் சிறந்து விளங்குவதற்கான அதன் தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் மேலும் வலுப்படுத்துகிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.'

உற்பத்தி அல்லாத இரண்டு திட்டங்களில் தங்க விருதை வென்ற முதலாவது திட்டமானது, நிறுவனம் முழுவதும் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சியெட் களனியில் இணையத்தள கற்றலை ஏற்றுக்கொள்வது தொடர்பானது. இந்தப் பிரிவில் இரண்டாவது திட்டமானது விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் நீண்டகால பாதகமான காலநிலை காரணமாக அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலைகள் ஆகியவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இயற்கை இறப்பர் தர மேம்பாட்டுத் திட்டமாகும்.

இதேவேளை 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்படும் டயர் உற்பத்தி நிறுவனமாக தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தால் (CPM) தேர்ந்தெடுக்கப்பட்ட சியெட் களனி ஹோல்டிங்ஸ், இலங்கையின் அதிக விருதுகளைப் பெற்ற டயர் உற்பத்தியாளராக தனது நாமத்தை பதிவு செய்துள்ளது. இதற்கிணங்க சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் உட்பட ஏராளமான விருதுகள் மற்றும் சர்வதேச தர வட்டங்கள் மாநாட்டிலிருந்து பல்வேறு தர விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்ட மற்றும் செயல்பாட்டு இணக்கம் மற்றும் வலுவான விநியோகச் சங்கிலிக்கான பாதுகாப்பை அங்கீகரிக்கும் விதமாக, இலங்கை சுங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார செயற்பாட்டாளர் (AEO) அடுக்கு அந்தஸ்தை சியெட் களனி பெற்றுள்ளது.

இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் பாதியை சியெட் களனி உற்பத்தி செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட டயர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் தேசிய பொருளாதாரம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. மேலும், அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X