2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நவலோக வைத்தியசாலையில் முதியோர் பராமரிப்புப் பிரிவு

Gavitha   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தொடர்ச்சியாகப் புத்தாக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டின் ஒரு அங்கமாக, நவலோக வைத்தியசாலை முதியோரைப் பராமரிப்பதற்காக விசேட பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளது. சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மேம்பாடுகளால் மக்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கின்றமை இதற்கான காரணமாகும். பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமை மற்றும் முதியோர் சனத்தொகை அதிகரித்துச் செல்கின்றமை ஆகியன மெதுவான சனத்தொகை நிலைமாற்றத்தை விளைவித்துள்ளதுடன், இது இறுதியில் சனத்தொகையில் முதியோர் பெரும்பான்மையாக இருப்பதற்கு வழிவகுக்கும். இதன் பின்னணியில் இத்துறையில் முதியோர் மருத்துவம் மற்றும் மேம்பாடுகள் எமது நாட்டில் மிகுந்த முக்கியத்துவம் வகிக்கவுள்ளன.    

'முதியோரின் சுகாதாரப் பராமரிப்புடன் தொடர்புடைய முதியோர் மருத்துவம் ஒரு விசேட துறையாகும். இத்துறையானது,  முதியோர் நோய்களால் பாதிக்கப்படுகின்ற கோணத்தில் மட்டும் எடுத்து நோக்காது, இதனால், பாதிக்கப்படுகின்ற ஏனைய அனைத்து உடலியல் முறைமைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி, அவற்றை மதிப்பீடு செய்து, நிர்வகிக்கும் ஒரு முழுமையான அணுகு முறையை கைக்கொள்கின்றது. இந்த நோக்கத்துக்கு விசேடமான பிரிவுகளை அமைப்பது மிகவும் முக்கியமாக உள்ளதுடன், முதியோர் மிகச் சிறந்த தரத்திலான வாழ்க்கையை அனுபவிப்பதற்கும், அவர்களின் சுதந்திரத்துக்கும் உதவ முடியும்' என்று வைத்திய ஆலோசகரும், முதுமை சிகிச்சை வைத்திய நிபுணருமான வைத்தியர் சந்தன கனகரட்ண குறிப்பிட்டார்.   

முதுமையடைவது உடலில் உடலியல் நடைமுறைகள் குறைந்து செல்வதற்கு வழிவகுப்பதுடன், அவர்களின் உடலியல் திறன்களும் குறைவடைந்து செல்கின்றன. பாரதூரமல்லாத பிரச்சினைகள் கூட அவர்களை எளிதில் பாதிப்பிற்குள்ளாக்கி, பாரிய பிரச்சனைகளுக்கு வழிகோலுவதுடன், அதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் ஒட்டுமொத்தமாக அதிகரிக்கின்றன. இந்த வியாதிகளை நிர்வகிப்பதற்கு நோயாளர்கள் முதலில் ஒரு முழுமையான முதுமை நோய் மதிப்பீட்டு நடைமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதன் மூலமாக மருத்துவ ரீதியாகவும், உடலியல் மற்றும் தொழிற்பாட்டு ரீதியாகவும் உள்ள பிரச்சனைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அவற்றை நிர்வகிப்பதற்கான நடைமுறை இலக்குகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதன் பின்னர் முதுமை சிகிச்சை வைத்திய நிபுணரின் வழிகாட்டலுடன், பல்வேறுபட்ட தொழில் சார் வல்லுனர்களின் பங்களிப்புடன் பராமரிப்பு மற்றும் சிகிச்சை என்பன முன்னெடுக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றது.    

முதுமையடைவதால் ஏற்படும் பிரச்சினைகள் பொதுவாக முதியோரைப் பாதிக்கின்ற போதிலும், வாழ்வில் நோய்கள் மற்றும் இயலாமை காரணமாக உடல் இருப்புக்கள் வெறுமையாகி அதன் காரணமாக வயது வேறுபாடின்றி வளர்ந்தவர்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அவர்களுக்கும் இதே மதிப்பீட்டு முறைகள் மற்றும் நிர்வகிக்கும் நடைமுறைகளை பின்பற்ற முடியும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X