Freelancer / 2023 நவம்பர் 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தின் கட்டுகெல்ல பிரதேசத்தின் பின்தங்கிய சிறுவர், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக புதிதாக விஸ்தரிப்பு செய்யப்பட்ட கண்டி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் கையளிப்பு நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி கலந்து கொண்டார். இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. ஜப்பானிய அரசாங்கத்தின் Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) திட்டத்தின் கீழ் இந்த விஸ்தரிப்பு பணிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்தத் திட்டத்திற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் மொத்தமாக 63,935 அமெரிக்க டொலர்கள் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தன. இரு மாடிகளை புதிதாக சேர்த்து, அதில் வகுப்பறைகள், மண்டபம், நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறை போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. பயிலல் சூழலை இந்த வசதி மேம்படுத்தும் என்பதுடன், சுமார் 350 சிறுவர்களையும், இளைஞர்களையும் உள்வாங்கக்கூடிய வகையில் விஸ்தரிக்கப்படும். அத்துடன், சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் 80 பின்தங்கிய பெண்களுக்கும் தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்கும்.
இலங்கையின் நிலைபேறான அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்குவதற்கான அர்ப்பணிப்பை தூதுவர் மிசுகொஷி மீள உறுதி செய்திருந்ததுடன், மனித உரிமைகள் மற்றும் சிறுவர்கள், பெண்களின் கண்ணியத்தை காக்கும் செயற்பாடுகள், அவர்களின் உறுதித்தன்மை மற்றும் சுதந்தித்தை ஊக்குவிப்பது மற்றும் வறுமை சங்கிலியை இல்லாமல் செய்து, உள்ளடக்கமான சமூகத்தை ஏற்படுத்துவதில் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
39 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
58 minute ago
2 hours ago