2025 மே 19, திங்கட்கிழமை

புதிய Mahindra Maxi Truck அறிமுகம்

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

IDEAL மோட்டர்ஸ் பிரைவட் லிமிடெட், ஒரு டொன்னுக்கு அதிகமான எடை கொண்ட புதிய ட்ரக்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட Anti-Lock Brake System (ABS) வசதியுடன் இந்த Mahindra Maxi ட்ரக்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

புதிய Mahindra Maxi ட்ரக்கில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட ABS சிஸ்டம் ஊடாக சாரதிக்கு உச்ச பாதுகாப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. மேலும், IDEAL மோட்டர்ஸ் சந்தையில் புதிய 2020ஆம் ஆண்டின் Maxi ட்ரக்கை அறிமுகம் செய்திருந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு தெரிவு செய்து கொள்ளக்கூடிய நான்கு மாதிரிகளையும் வழங்குகின்றது. 

2001இல், இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் தமது சிறிய டீசல் ட்ரக் ஊடாக CRD தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் CRD தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள முடிந்தது. கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கும் எம்மால் இந்த அறிவை பகிர்ந்து கொள்ள முடிந்ததுடன், கிராமிய மட்டத்தில் இந்த தொழில்நுட்பத்தின் அனுகூலத்தை பெற்றுக் கொள்ள முடிந்தது. அக்கால கட்டத்தில் நாம் மேற்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையினூடாக, சந்தையில் Maxi ட்ரக் வாகனங்களில் முன்னணியில் திகழ்கின்றது. அதுபோன்று, BS4 தொழில்நுட்பமும் எமக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X