2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் யூனியன் வங்கி Power H.E.R

Freelancer   / 2025 மார்ச் 14 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மகளிர் தினத்துடன் தொடர்புபடும் வகையில், யூனியன் வங்கியினால் யூனியன் வங்கி Power H.E.R திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வியாபாரங்களை மேம்படுத்தி புதிய உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்வதற்கு ஊக்குவித்து வலுவூட்டும் பெண்களுக்காக வங்கியியல் தீர்வாக அமைந்துள்ளது. யூனியன் வங்கி Power H.E.R ஊடாக, தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்திருக்கும் நிலையில், பெண்களுக்காக வங்கியியல் தீர்வை இலவசமாக வழங்கும், ஒரே தன்னியக்கமயப்படுத்தப்பட்ட பண முகாமைத்துவ தீர்வாக அமைந்திருப்பதுடன், பரந்தளவு மாற்றியமைத்துக் கொள்ளதக்க நிதிவசதியளிப்பு, விசேட வட்டி வீதங்கள், காப்புறுதி, மானியக் கொடுப்பனவுகள், நிபுணத்துவ ஆலோசனை, வியாபார இணைப்புகள் மற்றும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் திஷானி திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் காணப்படும் பெருமளவு சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் பெண்களை தலைமைத்துவமாக கொண்டவையாகும் அல்லது அவர்களின் உரிமையில் இயங்குபவையாகும். பெருமளவு பெண் தொழில்முயற்சியாளர்கள் நிலைபேறான வியாபாரங்களை உருவாக்க முயற்சிப்பதால், இந்தப் பிரிவு வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. யூனியன் வங்கி Power H.E.R ஊடாக, அதன் இலவச பண முகாமைத்துவ தீர்வுக்கு பெருமளவு பெறுமதி சேர்க்கப்படுவதுடன், தொழில்முயற்சியாளர்களுக்கு நிதிசார் முகாமைத்துவம் தொடர்பில் கவலை கொள்ளாமல் தமது வியாபாரங்களை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும். மேலும், தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் (NEDP) இலவசமாக இணைந்து கொள்வதனூடாக, அவர்களின் வியாபார ஆற்றல்களை மேம்படுத்தி விரிவாக்கிக் கொள்ள ஆதரவளிக்கப்படும்.” என்றார்.

பிரதம வியாபார அதிகாரி அசங்க ரன்ஹொட்டி கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கி Power H.E.R திட்டத்தினூடாக, வங்கியின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்காக வழங்கப்படும் தீர்வுகளுக்கு மேலதிகமாக கவர்ச்சிரமான சலுகைகள் சேர்க்கப்படும். இதர அனுகூலங்களுடன், வங்கியினால், விவசாயம், உற்பத்தி மற்றும் சுற்றுலா போன்ற தொழிற்துறைகளுக்கு கடன்வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான அணுகல் வசதி வழங்கப்பட்டு, நாடு முழுவதையும் சேர்ந்த வங்கியின் பரந்த கிளை வலையமைப்பினூடாக, பெருமளவு பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனூடாக, வியாபாரங்களுக்கு தமது பிரிவுகளில் இயங்குவதற்கு அவசியமான ஆதரவு வழங்கப்படுகின்றது.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X