Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு ஆரோக்கியமான தொழிலாளி என்பவர் ஆக்க வளம் கொண்ட ஊழியர் ஆவார். பெரும்பாலான தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியை தொழில் பார்க்கும் ஓர் எல்லைக்குள் செலவிடுவதால் எந்தவொரு நிறுவனமும் இந்த சொற்றொடரை முக்கியமாக சிந்திக்க வேண்டும். ஒரு ஊழியர் இல்லாவிட்டால் நிறுவனமொன்றின் முன்னேற்ற பாதையில் செல்வதற்கான காரணத்துக்குப் பங்களிப்பு இருக்காது.
உடல் நலக் குறைவு என்பது வாழ்க்கையின் ஒரு இயல்பான விடயமாகும், மேலும் இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனம் ஒன்றின் சமீபத்திய ஆய்வுகளின் படி 85.5% ஊழியர்கள் வேலைக்கு நேரம் ஒதுக்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார நிலைமை காரணமாக 57.6% வேலைகள் இல்லாமல் போயுள்ளன. அதேநேரத்தில் ஒவ்வொரு வருடமும் மொத்த உற்பத்தித் திறன் இழப்பானது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10.43 நாள்களாகும். இதன் பெறுமதியானது சுமார் ஆண்டொன்றுக்கு 8 மில்லியன் ரூபாயாகும்.
எனினும் மிகவும் கவலையான விடயம் என்னவென்றால் 69.5% பேர் தற்போதைய நிலை காரணமாக கூடுதலான நாட்களை இழந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்; - இது ஊழியரின் உடல்நிலை பாதிக்கப்படுவதால் பணியில் இருக்கும் போது வழக்கத்தை விட குறைந்த மட்டத்தில் செயல்படுவதாக வரையறுக்கப்படுகிறது.
வேலை செய்யாததனால் ஏற்படுகின்ற விளைவுகளைத் தவிர, அதனை ஈடு செய்வதற்காக மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவு, அந்த ஊழியர்களின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் குறைதல், வர்த்தக பின்னடைவுகள் அல்லது வாடிக்கையாளர்களின் அதிருப்தித் தன்மை மற்றும் பணியாளர் மன உறுதியுடன் உள்ள சிக்கல்கள் ஆகியவை ஒரு முதலாளியால் ஏற்கவேண்டிய பிற செலவுகளாகும்.
இன்றைய சூழ்நிலையில், சுகாதாரப் பாதுகாப்பு என்பது வெறும் நோய் பராமரிப்புக்கு ஒத்ததாகவே காணப்படுகிறது. முதலாளிகள் பொதுவாக சுகாதார காப்பீட்டின் வழியில் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட பின்னரே ஆதரவை வழங்குகிறார்கள். இலங்கையில், 700 ஊழியர்களைக் கொண்ட ஒரு குழுவில், ஒரு நிறுவனம் தலைவலி காரணமாக 2.5 வேலை நாள்களை இழக்கிறது. அதேநேரத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் நான்கு நாட்கள் காய்ச்சல் ஏற்பட்டால் 4.5 வேலை நாட்களை இழக்கும். இது ஒரு பணியிடத்தில் முதலாளிக்கு ஏற்படக் கூடிய மன அழுத்தத்துக்கு ஒரு காரணமாகும்.
ஒரு பணிபுரியும் இடம் தொழிலாளர்களின் உடல், மன, பொருளாதார, சமூக நல்வாழ்வை நேரடியாக பாதிக்கிறது மற்றும் இதையொட்டி அவர்களின் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இருப்பினும், இதுவொரு நீண்டநோக்குடைய பார்வையாளர்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பைக் கொண்ட ஒரு சிறந்த அமைப்பாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுகாதார ஆபாயங்களை ஒரு சதவீதத்தால் குறைப்பதன் மூலம் ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 83.02 அமெரிக்க டெலர்கள் தொடக்கம் 103.39 அமெரிக்க டொலர்கள் வரை சேமிக்க முடியுமென உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த சிக்கல்களை எதிர்கொள்ள ஒரு உறுதியான மற்றும் நிலையான நடவடிக்கையாக, பணிநிலை மேம்பாட்டுத் திட்டங்கள், நோய் மற்றும் மன அழுத்தத்திற்கு காரணமாக இல்லாத சாதகமான தாக்கம் போன்றவையாகும். சுகாதாரக் கல்வித் திட்டங்கள், சுகாதார சோதனைகள் மற்றும் பணியிடங்களில் முதலாளிமார் வழங்கும் வழக்கமான மருத்துவ உதவிகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளுதல் போன்றவை திடீர் விடுப்பு மற்றும் உற்பத்தித் திறன் இல்லாத நீண்டகால வாய்ப்புக்களைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது. இது நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் காணவும் பயனுள்ளதாக அமைகின்றது.
உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, நீரிழிவு முகாமைத்துவம், மன அழுத்தம் மற்றும் பதட்டம் மற்றும் புகைப்பிடிப்பதை நிறுத்துதல் போன்ற பகுதிகளில் சுகாதார அபாயங்களை கண்டறிந்து குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும். சமீபத்திய கொரோனா வைரஸ் போன்ற சிக்கலான பீதியடையக் கூடிய விடயங்களைக் கூட, ஒரு பணியிடத்தில் விவேகமான சுகாதார குழுவை விரைவாக அணிதிரட்டுவதன் மூலம் கவனமாக மேற்கொள்ள முடியும். கூடுதலாக, இந்தத் திட்டங்கள் ஊழியர்களுக்கு உணவு மற்றும் உடற்பயிற்சியின் வழியில் ஒவ்வொரு நபரின் தேவைகள் மற்றும் ஆரோக்கியமான மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறைகளை வடிவமைக்க உதவும். இந்த நடவடிக்கைகளின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் நிறுவனங்களின் பணிச் சூழல் மற்றும் கலாச்சாரத்தின் குறைப்பாடுகளை வேறுபடுத்தவும் கவனத்தை ஈர்க்கவும் உதவும்.
ஹெல்தி லைஃப் கிளினிக் போன்ற முன்னணி சுகாதார நிறுவனங்கள் கொழும்பு பணியிடங்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பெரிதும் ஆதரிக்கின்றன. பெருநிறுவன துறையில் பணியாற்றுவோருக்கு அன்றாட வாழ்க்கையின் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது மற்றும் மேம்படுத்துவது என்பது குறித்து கல்வி கற்பித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதன் மூலம் சுகாதாரத்துக்கான தடுப்பு அணுகுமுறையை எடுக்கும் பெருநிறுவன ஆரோக்கியத் திட்டங்களை நாங்கள் வழங்குகின்றோம். ஹெல்தி லைஃப் கிளினிக் நிறுவனங்களுக்கான வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை தீவிரமாக நடத்துவதுடன் மற்றும் மேம்பட்ட வாழக்கை முறை பழக்கங்களை ஊக்குவிக்கும் திட்டங்களை நடத்துகிறது, இதுவொரு பெருநிறுவன கட்டமைப்பில், ஆரோக்கியம் என்பது நீண்டகால உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறனை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய தீர்மானமாகும்.
எந்தவொரு நிறுவனத்தினதும் எதிர்கால வெற்றியை ஆரோக்கியமான, தகுதிவாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் தொழிலாளர்களால் மட்டுமே அடைய முடியும் என்பதை அதிக தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதால், சுகாதாரத்தை ஊக்குவிக்கும் பணியிடம் மிகவும் பொருத்தமானது எனவும் மாறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தடுப்பு நடவடிக்கை என்பது குணப்படுத்துவதை விட மிகவும் சிறந்ததாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .