2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பொரளை மஹாபொல லொட்டோ நிலையத்தின் சேவைகள்

A.P.Mathan   / 2015 நவம்பர் 04 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாபொல லொட்டோ நடமாடும் லொத்தர் விற்பனை அலகு போன்ற பல புத்தாக்கமான சேவைகளை அண்மையில் அறிமுகம் செய்திருந்த நிலையில் அதன் பொரளை விற்பனை நிலையம் பரிசு வெற்றியாளர்களுக்கும், டிக்கட் விற்பனையாளர்களுக்கும் சகல தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய பகுதியாக அமைந்துள்ளது. 

வெகுவிரைவில் மஹாபொல லொட்டோ அறிமுகம் செய்யவுள்ள பல புதிய தயாரிப்புகளுக்கு சேவைகளை வழங்கக்கூடிய வகையில் மெருகேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 'Pick Your Own Lucky Number' எனும் புத்தாக்கமான சேவையும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இல.26, கலாநிதி என்.எம்.பெரேரா மாவத்தை, பொரளை எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த விற்பனையகம், மஹாபொல லொட்டோவின் பெருமளவில் அதிகரித்து வரும் விநியோகஸ்த்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக பரிசுகளை வெற்றியீட்டியவர்களுக்கு விஜயம் செய்து, தமக்குரிய பரிசுகளை இலகுவாகவும் சௌகர்யமான முறையிலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த நிலையத்தின் பெருமளவு பிரதேசம், மஹாபொல லொட்டோ அதிர்ஷ்டசீட்டிழுப்பை முன்னெடுக்கும் பகுதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்நிலையத்தில் வாரத்தின் ஆறு நாட்களும் அதிர்ஷ்ட இலக்க தெரிவுகள் இடம்பெறும். பொரளை மஹாபொல லொட்டோ நிலையம், பரிசுகளை வென்றவர்களை சரிபார்க்கும் வகையில் அமைந்த நிலையமாகவும் திகழ்கிறது. 

மேலும், மஹாபொல லொட்டோ நிலையம், பெருமளவு விநியோகஸ்த்தர் சேவைகளை வழங்கும் மத்திய நிலையமாக அமைந்துள்ளது. அத்துடன், விநியோகஸ்த்தர்களுக்கான பயிற்சிகள், வாடிக்கையாளர் பராமரிப்பு விநியோகஸ்த்தர்கள் மற்றும் இயந்திர இயக்குநர்கள் போன்றவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பொரளை மஹாபொல லொட்டோ நிலையத்தின் பிரதான செயற்பாடுகளில் இவை அனைத்தும் உள்ளடங்கியுள்ளன. மஹாபொல லொட்டோ வலையமைப்பு நாடு முழுவதும் விரிவடைந்து காணப்படும் நிலையில், இந்த நிலையத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X