2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

போர்ட் சிற்றிக்கு புதிய உடன்படிக்கை

Gavitha   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் கடலில் நிர்மாணிக்கப்படவுள்ள போர்ட் சிற்றி தொடர்பில் புதிய உடன்படிக்கை ஒன்றை தயாரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் செயற்குழு ஒன்றை நியமித்துள்ளார்.

ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களை கொண்டு, பிரதமரின் செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தச் செயற்குழு இயங்கவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

'நாம் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. ஆனாலும் புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவது பற்றிய பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெறுகின்றன. முன்னர் 99 வருட காலப் பகுதிக்கு 20 ஹெக்டெயர்களை முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். எமது நாட்டுக்கு அனுகூலம் பயக்கக்கூடிய வகையில் சுமார் 50 நிபந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்' என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X