2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மரக்கறி விலைகள் வீழ்ச்சி

Gavitha   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புளை பொருளாதார நிலையத்துக்கு பெருமளவு மரக்கறிகள் கிடைத்த வண்ணமுள்ளதால், நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீட்ரூட், உருளைக்கிழங்கு, கரட், கறிமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், கோவா, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய உற்பத்திகள் ஆராய்ச்சி நிலையத்தின் புள்ளிவிவரங்களுக்கான பொறுப்பதிகாரி உபுல் அருண சாந்த தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் நிலவிய மரக்கறிகளின் விலைகளை விட தற்போது பெருமளவு மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் விலைகள் வீழ்ச்சியடைய அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

முருங்கைக்காய், தக்காளி, போஞ்சி, கரட் மற்றும் பீர்க்கங்காய் போன்றவற்றின் விலைகளும் சரிவடைந்துள்ளன. வன்னி, மரஸ்சான, மாத்தளை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய பகுதிகளிலிருந்து மரக்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நாளாந்தம் தம்புளை பொருளாதார நிலையத்துக்கு சுமார் 100 லொறிகள் மரக்கறிகளுடன் வருகை தருவதாகவும், மலைநாட்டிலிருந்து கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாகவும், அப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலை இதில் பங்களிப்பு செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போஞ்சி கிலோகிராம் ஒன்றின் விலை 120 ரூபாயாகவும், கரட் கிலோகிராம் ஒன்றின் விலை 140 ரூபாயாகவும், லீக்ஸ் கிலோகிராம் ஒன்றின் விலை 80 ரூபாயாகவும், கறிமிளகாய் கிலோகிராம் ஒன்றின் விலை 250 ரூபாயாகவும், பூசணி கிலோகிராம் ஒன்றின் விலை 60 ரூபாயாகவும், பீட்ரூட் கிலோகிராம் ஒன்றின் விலை 110 ரூபாயாகவும், உள்நாட்டு உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 90 ரூபாயாகவும், வெங்காயம் கிலோகிராம் ஒன்றின் விலை 60 ரூபாயாகவும், கோவா கிலோகிராம் ஒன்றின் விலை 80 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X