Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மே 02 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நிலவும் கொரோனாவைரஸ் தொற்றுநிலை காரணமாக, நாட்டு மக்கள் மத்தியில் சுகாதார இடர் தோன்றியுள்ளமை மாத்திரமன்றி, நீண்ட கால அடிப்படையில் உணவு பாதுகாப்புக்கும் இடராக அமைந்துவிடக்கூடிய சூழல் காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் எழக்கூடிய இவ்வாறான இடர் நிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னேற்பாடாக செயலாற்றும் வகையில் உணவு தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் தொடர்பான மூலோபாயங்கள், புத்தாக்கத்துக்கு முன்னுரிமையளிப்பு, பின்பற்றல் போன்றவற்றை தொடர்வதனூடாக உற்பத்தித்திறன் மற்றும் நிலைபேறாண்மையை கொண்டிருக்க முடியும்.
SLIITஇன் BSc (Hons) in Biotechnology கற்கையினூடாக மாணவர்களுக்கு உயிரியல் விஞ்ஞானத்துறையில் பட்டத்தை தொடரக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, இன்றைய சவால்கள் நிறைந்த சூழலில், நவீன உயிரியல் தொழில்நுட்ப செயற்பாடுகள் பற்றி மாணவர்கள் அறிந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், விவசாயச் செய்கை தொடர்பில் தமது பிரயோக நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான அடிப்படையிலான தொழிற்துறையாக உயிரியல் தொழில்நுட்பம் இனங்காணப்பட்டுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குரிய எந்திரமாகவும் கருதப்படுகின்றது. புதிய தொழில்நுட்பங்களினூடாக விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்தத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள BSc (Hons) in Biotechnology கற்கையினூடாக, மாணவர்களுக்கு நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பது, கற்றல்களை தொடர்வதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தற்போது SLIIT BSc (Hons) in Biotechnology கற்கையை தொடரும் மாணவர்கள், புலனற்ற பசுமைப் புரட்சியில் உயிரியல் தொழில்நுட்பத்தின் பங்களிப்புக்காக அதில் புத்தாக்கமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளனர். விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பத்தினூடாக பெற்றுக் கொள்ளக்கூடிய அனுகூலங்கள் பற்றி மாணவர்கள் போதியளவு அறிவை பெற்றுக் கொள்வார்கள்.
நான்காண்டு கற்கையினூடாக, துறையில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதுடன், இந்த கற்கையினூடாக, மாணவர்களுக்கு தமது அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறந்த அடித்தளம் உருவாக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் வெவ்வேறு உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும் ஏதுவாக அமைந்திருக்கும்.
விலங்குபராமரிப்பு துறை, மருந்தாக்கல் துறை, உயிரியல் மருத்துவ பொறியியல், விவசாயத் துறை, தயாரிப்பு உற்பத்தி, போஷாக்கு உயிரியல் தொழில்நுட்பம், உயிரியல் தரவுகள், மருத்துவ ஆய்வுகள், கடல்சார் உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் பயங்கரவாதம் போன்ற பிரிவுகளில் தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன. க.பொ.த உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞானத்தை பயின்ற மாணவர்களுக்கு இந்தக் கற்கை மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும்.
SLIIT இன் இயற்கை விஞ்ஞானங்கள், மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பிரிவின் தலைமை அதிகாரி ஸ்ரீயாணி பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
“உயிரியல் விஞ்ஞானம் மற்றும் அத்துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதில் ஆர்வத்தை கொண்டுள்ள மாணவர்களுக்கு பொருத்தமான கற்கையை வழங்குவது எமது இலக்காகும். தற்போதைய நூற்றாண்டு உயிரியல் விஞ்ஞான செயற்பாடுகளை சார்ந்து அமைந்துள்ளது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். உயிரியல் வி்ஞ்ஞானத்தில் காணப்படும் சிக்கல்கள் நிறைந்த கொள்கைகள், பரிசோதனைகள் மற்றும் கணிதசாதனங்கள் போன்றவற்றை நன்கு புரிந்து கொள்வதற்கு இந்த கற்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். நாட்டின் விவசாய, தொழிற்துறை, சுகாதார மற்றும் சூழல்சார் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உயிரியல் தொழில்நுட்பம் சிறந்த தீர்வாக அமைந்திருக்கும் எனவும் பரந்தளவில் கருதப்படுகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .