2025 மே 19, திங்கட்கிழமை

மொபிடெலிடமிருந்து இலங்கையில் 5G அனுபவம்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெல், One Galle Faceஇல் உள்ள தமது நிலையத்தில், முதலாவது 5G தளத்தை அறிமுகப்படுத்தி வைத்தது. இதன் மூலம் 5Gயின் உண்மையான சக்தியை அனுபவிக்கும் வாய்ப்பை மொபிடெல் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  

ஸ்ட்ரீமர்கள், வாடிக்கையாளர்கள், கேம்ஸ் விளையாடுவோர் மற்றும் டிஜிட்டல் ஆர்வம் கொண்டோர் என அனைவருக்கும் இந்த நிலையத்துக்கு வருகை தந்து 5Gயின் உண்மையான சக்தியை அனுபவித்திடவும் மொபிடெலுடன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதனை உணர்ந்திடவும் முடியும். இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனர் என்ற வகையில் மொபிடெல், 2019ஆம் ஆண்டில் தமது ப்ரோட்பாண்ட் விஸ்தரிப்புக்காக US$100 மில்லியனுக்கும் அதிகமான தொகையினை முதலீடு செய்தது.  

முழு நாட்டுக்கும் தொடர்ந்தும் வலையமைப்பை விஸ்தரிக்கவும், 5G புழக்கத்துக்கு வரும் சமயம், அதை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினையும் இது ஒதுக்கியுள்ளது. தெற்காசியாவில் 5G சோதனையை மேற்கொள்ளும் முதலாவது மொபைல் சேவை வழங்குனர், மொபிடெல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

இலங்கையில், அதிவேக மொபைல் வலையமைப்பைக் கொண்டிருப்பதற்காகவும் அதியுன்னத ப்ரோட்பாண்ட் வேகத்துக்காகவும் இணைய வேக சோதனையின் உலகளாவிய முன்னோடியான Ooklaவின் Speedtest விருதையும் மொபிடெல் தொடர்ந்தும் வென்றுள்ளது.  

அனைத்து இலங்கையர்களுக்கும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை வழங்கிடும் நோக்கில், மொபிடெலானது நவீன தொழில்நுட்பங்களில் அதிக முதலீடுகளைச் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற மொபைல் அனுபவங்களை வழங்குவதுடன், தகவல் தொடர்பாடல் மற்றும் அறிவு சார் சமூகத்தைக் கொண்டதோர் இலங்கையை உருவாக்குவதில் முன்னோக்கி செல்கிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X