2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

முதல் அரையாண்டில் வரி சேகரிப்பு அதிகரிப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வரி சேகரிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2016 இன் முதல் அரையாண்டில் 100 பில்லியன் ரூபாயால் வரி சேகரிப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீத அதிகரிப்பு எனவும், இது குறித்த அறிவித்தலை நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேற்கொண்டதாகவும் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

சுங்க திணைக்களத்தில் மாத்திரம் வரி திரட்டல் 40 சதவீதத்தால் அதிகரித்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
எனவே இது போன்ற தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் போது தற்போது வரி அறவிடப்படுவதாகவும், அதன் காரணமாக இவ் வரி திரட்டலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X