2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மெல்ஸ்டா ரீகல் நான்கு ஆண்டுகள் பூர்த்தி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமான நிதித் தீர்வுகளை வழங்குவது எனும் தனது கூட்டாண்மைக் கொள்கையின் பிரகாரம் மெல்ஸ்டா ரீகல் நிறுவனம், புதிய இரு சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளதுடன், தனது நான்கு வருட கால செயற்பாட்டையும் பூர்த்தி செய்துள்ளது.  

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது மற்றும் வாடிக்கையாளர்களின் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கைக்கு சௌகரியத்​ைத சேர்ப்பது என்பவற்றை புரிந்து கொண்டு, மெல்ஸ்டர ரீகல் புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.  

மெல்ஸ்டா ரீகலின் புதிய புத்தாக்கமான தீர்வுகள் ஊடாக, வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தமது விரல் நொடிகளில் பாதுகாப்பான முறையில் தமது நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.  

'எமது பிரதான இலக்கு புத்தாக்கமான தீர்வுகளை எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாகும். அதனூடாக சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது இலக்காக அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர் தேவைகளை இனங்கண்டு, அவற்றுக்கேற்ற வகையில் சந்தையில் தீர்வுகளையும், நெகிழ்ச்சியையும் தெரிவுகளையும் வழங்குவது எமது நோக்காகும்' என நிறுவனத்தின் தலைவர் அமித லால் குணரட்ன தெரிவித்தார்.   

வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மெல்ஸ்டா டெபிட் அட்டைகள் அமைந்துள்ளன. வேகமான, பாதுகாப்பான, மதிநுட்பமான மற்றும் சௌகரியமான முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளன. நாடு முழுவதும் காணப்படும் 3000க்கும் அதிகமான ATஆகளிலிருந்து பணத்தை மீளப்பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், உலகளாவிய ரீதியில் காணப்படும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான VISA வலையமைப்பிலிருந்து பணத்தை மீளப்பெறவும் முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் பொருட்களை கொள்வனவு செய்யச் செல்லும் போது, தற்போது தம்முடன் பெருமளவு பணத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிலையையும் தவிர்த்துக் கொள்ளலாம்.   

சேமிப்புக் கணக்குகளுக்கு 8 சதவீதம் எனும் கவர்ச்சிகரமான வட்டயை எவ்வித மறைமுகக் கட்டணங்களுமின்றி வழங்குகிறது. இலங்கையர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதுடன், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதை தனது பிரத்தியேக சிந்தனையாக கொண்டுள்ளது. மெல்ஸ்டா ரீகல் வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்கை ஆகக்குறைந்தது 1000 ரூபாயை வைப்புச் செய்து ஆரம்பித்துக் கொள்ள முடியும். நாடு முழுவதிலும் காணப்படும் மெல்ஸ்டா ரீகல் கிளைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வங்கிக் கிளைகளின் ஊடாக தமது கணக்குக்கு பணத்தை வைப்புச் செய்ய முடியும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X