Editorial / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘லஸ்ஸன ஃபுளோரா’ (அழகிய மலர்கள்) நிறுவனம், தனது புத்தம்புதிய காட்சியறையை யாழ்ப்பாணத்தில் இலக்கம் 754A, வைத்தியசாலை வீதி என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. இதன்மூலம் நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் நீண்ட தாமதத்துக்குள்ளாகி இருந்த, வட மாகாணத்துக்கான பிரசன்னத்தை நிறுவனம் தற்போது உறுதி செய்திருக்கின்றது. போதுமான வாகனத் தரிப்பிட வசதியுடன், சௌகரியமான இடத்தில், மூலோபாய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இக் காட்சியறையானது, யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் சந்திக்கு அருகாமையில் காணப்படுகின்றது.

“நேரடியாகப் பண்ணைகளில் இருந்து தருவிக்கப்பட்ட புத்தெழில் மாறாத மலர்களை ‘லஸ்ஸன ஃபுளோரா’ நிறுவனம், குடாநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கச் செய்கின்ற அதேநேரத்தில், இணையவழி (ஒன்லைன்) பரிசு வசதிகளையும் இலவசமாக வழங்கல், திருமண அலங்கரிப்பு வசதி உட்பட, மேலும் பல சேவைகளையும் வழங்குகின்றது. இதனால், எமது நிறுவனம் யாழ்ப்பாணத்தில் காலடி பதிக்கின்றமையானது ஒரு புரட்சியாக அமைந்துள்ளது” என்று ‘லஸ்ஸன ஃபுளோரா’ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் லசந்த மாளவிகே தெரிவித்தார்.
இந்து மக்களைக் கணிசமாகக் கொண்ட யாழ்ப்பாணமானது, எப்போதும் பெருமளவு மலர்ப்பயன்பாட்டில் மைற்கற்களை எடியுள்ளது. புதுமை மாறாத நறுமணமுள்ள மலர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, யாழ். குடாநாட்டில் காணப்பட்ட வெற்றிடத்தைக் கடைசியாக ‘லஸ்ஸன ஃபுளோரா’ நிவர்த்தி செய்திருக்கின்றது.
1,200 சதுர அடி பரப்பளவிலான இக் காட்சியறையில், பெலிஹூல் ஓயா, கெப்பிட்டிபொல மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள ‘லஸ்ஸன ஃபுளோரா’ பண்ணைகளில் இருந்து நேரடியாகப் பறித்தெடுக்கப்பட்ட மலர்களை, புத்தெழில் மாறாமல் பேணுவதை, இக் குளிர்பதன காட்சி அறையானது உறுதிப்படுத்துகின்றது.
யாழ்ப்பாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்ததையடுத்து லஸ்ஸன ஃபுளோரா நிறுவனமானது, ஒன்லைன் பரிசு வசதிகள் பலவற்றையும் வழங்குகின்றது.
இவ்வசதி வட மாகாணம் முழுவதும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற அதேவேளையில், யாழ் நகர எல்லைக்குள் இலவச விநியோக சேவையையும் பெற்றுக் கொள்ள முடியும். வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கு, மலர்களை விநியோகம் செய்வதற்கான குறைந்தளவான விநியோகக் கட்டணம் ரூ. 200 இலிருந்து ஆரம்பமாகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago