Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 13 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், 2016ஆம் ஆண்டில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் (BASL) பங்காண்மையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பங்காண்மையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், அண்மையில் இரு தரப்பும் இதைப் புதுப்பித்திருந்தன.
இலங்கையர்களுக்குத் தமது எதிர்காலத்தைப் பாதுகாத்திட உதவும் வகையில் செயலாற்றுவதுடன், தமது கனவுகளை எய்துவதற்கும் பங்களிப்பு வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான பங்காண்மையினூடாகத் தமது புத்தாக்கமான பரந்த தீர்வுகளை, சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கும்.
1974ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இலங்கையில் இயங்கும் புகழ்பெற்றதும் முன்னணி நிபுணத்துவ அமைப்புகளில் ஒன்றாகவும் திகழ்கின்றது. கடந்த தசாப்த காலங்களில் தொடர்ச்சியாகச் சட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மேம்பாடு, நலன்புரிச் செயற்பாடுகளில் சங்கம் மேம்படுத்தல்களை முன்னெடுத்துள்ளது.
பல்வேறு முன்னணி நிபுணத்துவ அமைப்புகளுடன் பங்காண்மைகளைக் கட்டியெழுப்பி, ஆயுள் காப்புறுதியின் பாதுகாப்பை அந்த அமைப்புகளின் அங்கத்தவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. ஆயுள் காப்புறுதியால் பெற்றுக் கொள்ளக்கூடிய அனுகூலங்கள் தொடர்பில், நாட்டின் முக்கிய தொழில் நிலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விளக்கங்களை வழங்கி, அதன் அனுகூலத்தை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பது இந்தப் பங்காண்மைகளின் நோக்கமாக அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
35 minute ago
51 minute ago