2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யூனியன் வங்கி இலங்கையின் சிறந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக தெரிவு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி, இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் மீண்டும் தரப்படுத்தப்பட்டுள்ளது. Brand Finance இனால் Echelon Magazine உடன் இணைந்து வெளியிடப்பட்ட பிந்திய தரப்படுத்தல்களில் இந்த கௌரவிப்பு யூனியன் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் உறுதியான முன்னேற்றம் மற்றும் போட்டிகரமான நிதிச் சேவைகள் துறையில் வர்த்தக நாமத்தின் வளர்ச்சியடைந்து செல்லும் நிலையை வெளிப்படுத்துவதாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. யூனியன் வங்கியின் நிதிசார் வினைத்திறன், சந்தை கௌரவம் மற்றும் வாடிக்கையாளர் உறவுகள் போன்றவற்றை பிரதிபலிப்பதாக இந்த தரப்படுத்தல்கள் அமைந்துள்ளன.

இந்த பெருமைக்குரிய தருணம் தொடர்பில் யூனியன் வங்கியின் சந்தைப்படுத்தல் உப தலைவர் திஷானி திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “வங்கியின் பெருமளவு பங்குகளை CG Corp Global மூலோபாய ரீதியில் கையகப்படுத்தியிருந்ததை தொடர்ந்து, “வாழ்வை மாற்றியமைத்தல்” எனும் வர்த்தக நாம உறுதிமொழியில் வங்கி கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் போன்றவற்றினால் வழிநடத்தப்படுகிறது. யூனியன் வங்கியில் தொடர்ச்சியாக நம்பிக்கை கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். உறுதியான, எதிர்காலத்துக்கு தயாரான வர்த்தக நாமத்தை கட்டியெழுப்புவதில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த கௌரவிப்பு பிரதிபலிக்கிறது.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X