2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ரன்சலு சலுகை அட்டை

Gavitha   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி  Joint Apparel Association Forum (JAAF) உடனும் இந்த துறைக்கான ஊழியர் நம்பகத் திட்டமொன்றை முகாமைப்படுத்திவரும் Channel 17 உடனும் பங்குடைமையை ஏற்படுத்தியுள்ளதன் மூலம் இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை நிறுவனங்களுக்கு விசேட அனுகூலங்களைக் கொண்ட தனித்துவமான கடன் அட்டையை வழங்க முன்வந்துள்ளது.

JAAF செயல்படுத்திவரும் ரன்சலு சலுகைத் திட்டத்தின் எந்தவொரு அங்கத்தவரும் Commercial Bank இல் கணக்கை வைத்திருக்கும் அல்லது கணக்கை ஆரம்பிக்கும் பட்சத்தில் அவருக்கு 'ரன்சலு சலுகை அட்டை' இலவசமாக வழங்கப்படும்.

இந்த டெபிட் கார்ட் உரிமையாளர்கள் ஏற்கெனவே ரன்சலு திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளும் அனுகூலங்களுக்கு மேதலதிகமாக வழமையான Commercial Bank டெபிட் கார்ட்தாரர்கள் அனுபவிக்கும் பரந்த அளவிலான தள்ளுபடிகளையும் மற்றும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள தகுதி உடையவர்களாவர். 350,000 பேர் அங்கம் வகிக்கும் ரன்சலு நம்பக திட்டத்திலிருந்து அனுகூலங்களை கோருவதற்கு இந்த அட்டை ஒரு அடையாள சின்னமாகவும் விளங்கும்.

Channel17 பிரதம நிறைவேற்று அதிகாரி ஜூமர் பிறீனா கருத்து தெரிவித்த போது கூறியதாவது: 'நாட்டில் மிகப்பெரும் தனியான கைத்தொழில் தொழில்தருநரும் தேசிய பொருளாதாரத்துக்கு வேகமாக வளர்ந்துவரும் பங்களிப்பு சக்தியுமான ஆடை உற்பத்தி துறைக்கு ரன்சலு நம்பக திட்டம் நாடளாவிய உந்துசக்தியை தருகிறது.Channel 17 இன் தனித்துவமான நம்பக திட்டத்துக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சு பூரண ஆதரவை வழங்கி வருகிறது. தேசிய மொபைல் தொலைத் தொடர்பு சேவைகள் வழங்குநரான மொபிடெல் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கிவரும் அதேவேளை லேக்ஹவுஸ் அச்சகத்தாரும் வெளியீட்டாளர்களும் உத்தியோகபூர்வ கார்ட் வழங்குநர்களாவர். ஆடை உற்பத்தி தொழிலாளர்களில் அநேகமானோருக்கு வங்கிச் சேவைகளை வழங்கிவரும் Commercial Bank இத்திட்டத்துக்கு மிகவும் வரவேற்கத்தக்க சக்தியாகவும் விளங்குகின்றது.' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X