2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

லங்கா ஐஒசியின் இலாபம் 45 சதவீதத்தால் அதிகரிப்பு

Gavitha   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் பிரிவான லங்கா ஐஒசி நிறுவனத்தின் இலாபம் டிசம்பர் காலாண்டில் 45 சதவீதத்தால் அதிகரித்து 882 மில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பங்கொன்றின் மீதான உழைப்பு வீதம் 1.66 ரூபாயாக அதிகரித்திருந்தது. முன்னைய காலாண்டில் இந்த பெறுமதி 1.15 ரூபாயாக பதிவாகியிருந்தது.

குறித்த காலாண்டில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் வருமானம் 11 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 18.1 பில்லியன் ரூபாயாக வீழ்ச்சி பதிவாகியிருந்தது. விற்பனை செலவீனம் 13 சதவீதத்தால் குறைந்து 16.4 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இதன் மூலம் தேறிய இலாபம் 1.7 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

2015 டிசெம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் இலாபம் 77 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 680 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X