2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வத்தளையில் ODEL, Burger King நிறுவனங்கள் கால்பதிப்பு

Kogilavani   / 2016 மே 13 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

Softlogic குழுமம் பிரதிநிதித்துவம் செய்யும் உலக பிரசித்திபெற்ற உற்பத்திகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடன் ODEL and Burger King நிறுவனங்கள் இணைந்து சுறுசுறுப்பான வத்தளை சுற்றாடலில் வதிவோருக்கும் அவ்வழியாக போக்குவரத்து செய்வோருக்கும் சௌகரயமான திறந்த வெளிப் பிரதேசமொன்றில் புதியபாணியிலான அங்காடித் தொகுதியை அமைத்துள்ளன.

2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வத்தளையில் திறக்கப்பட்ட ODEL விற்பனை நிலையத்தை தற்போது கொழும்பு– நீர்கொழும்பு வீதியிலுள்ள முகவரி ஒன்றுக்கு மாற்றியமை முற்றாக மீள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள 9,000 சதுரஅடி விஸ்தீரணமான நவநாகரிகமான இடத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு மாடிகளில் பரந்த அளவிலான பொருட்களை விற்பனைக்கு வைப்பதுடன் அதே வளாகத்தில் Burger King நிறுவனத்தின் விற்பனை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதால் நுகர்வோரின் வசதிகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளன.

Softlogic குழும தலைவர் அசோக் பதிரகே புதிய ODEL விற்பனை நிலையத்தை இல.385, நீர்கொழும்பு வீதி, வத்தளையில் சம்பிரதாயபூரவமாக திறந்து வைத்தார்.

இந்த முயற்சியின் பயனாக, வத்தளையிலுள்ள ODEL பொருட் கொள்வனவாளர்;கள் மேலதிக வாகன தரிப்பு நிலையத்தையும் மிக்க பிரபல்யம் வாய்ந்த ODEL விற்பனைச் சாலைகளையும்  பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

பொருட் கொள்வனவு அனுபவத்தை மேலும்  உற்சாகம் அடையச் செய்யும் வகையில் மிக்க அவதானமாக வடிவமைக்கப்பட்டதும் பல்வேறு விருப்பத் தேர்வுகளைக் கொண்ட சர்வதேச உற்பத்திகளான பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கான காலணிகள், பைகள், விளையாட்டுப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் ஆகியனவும் இங்குகிடைக்கின்றன.

ODEL நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தில் சர்வதேச உற்பத்திகளில் Nike, Levi’s, Giordano, Puma, US Polo, Pepe Jeans, Disney  உள்ளிட்ட உடுதுணிகள், விளையாட்டு உடைகள் மற்றும் Michael Kors, DKNY, Adidas, Fossil; sunglasses from Prada, Vogue, Rayban, Giorgio Armani, Emporio Armani போன்ற உற்பத்திகளும் அடங்குகின்றன.

துரித உணவுக்கு பிரசித்தி பெற்ற Burger King இல் உணவருந்துவோர் Whopper, Long Chicken போன்ற பல்வேறு வகை சுவைசொட்டும் வெளிநாட்டு உணவுகளை மட்டுமன்றி நறுஞ்சுவையூட்டும் King Rice போன்ற உள்நாட்டு உணவுவகைகளையும் சுவைக்கலாம். பிரத்தியேக பெறுமதியுள்ள BK Big Meal  மற்றும் Royal Lunch போன்ற கலப்பு உணவுகளையும் இங்கு அருந்த முடியும். அதி விசேட உணவு வகைகளை தவிர சிறுவர்களுக்கு இலவச விளையாட்டுப் பொருட்களுடன் அவர்களது விருப்புக்கு ஏற்ற உணவுவகைகளும் Burger King இல் பரிமாறப்படுகின்றன.

மீள்வடிவமைக்கப்பட்ட ODEL விற்பனை நிலையம் Burger King உணவகம் உடன் இணைந்து வத்தளையில் மீள் அமைக்கப்படுவது ODEL Softlogic கொள்வனவு செய்ததை அடுத்து இடம்பெற்றுவரும் புதிய விஸ்தரிப்பு வேலைகளுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது என்றுSoftlogic Holdings PLC தலைவர் திரு. அசோக் பதிரகே தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X