2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வருடாந்த வீடியோ கேம் கொண்டாட்டம்

A.P.Mathan   / 2015 நவம்பர் 12 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த கேம்ஸ் கொண்டாட்டத்தில் Casual gamers, cyber athletes, comic book fans மற்றும் ஆகியோர் ஒன்றிணையவுள்ளனர். இலங்கை சைபர் கேம்ஸ் e-Sports போட்டித் தொடர் மற்றும் லங்கா கொமிக் கொன். ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த கொண்டாட்டம் அமைந்திருக்கும். மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த கேம் ஆர்வலர்களை இலக்காகக் கொண்டதாக இந்த போட்டித் தொடர் அமைந்திருக்கும். மாபெரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் விளையாட்டு ஆர்வலர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்படுவார்கள்.

தென் மாகாணத்துக்கான தகுதிகாண் சுற்று, நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் மாத்தறை ESOFT மெட்ரோ கம்பஸ் இல் இடம்பெறும். மத்திய மாகாணத்துக்கான தகுதிகாண் போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கண்டி சிற்றி சென்டரில் இடம்பெறும். இவற்றிலிருந்து வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுவோர், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் இறுதிப் போட்டியில் பங்குபற்றுவார்கள். 

இந்த கொண்டாட்டத்தில் 2000 க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், 10,000க்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமக்கு விருப்பமான கதாபாத்திரங்களைப் போல ஆடைகளை அணிந்து, இந்நிகழ்வில் இடம்பெறவுள்ள வெவ்வேறு செயற்பாடுகளில் பங்கேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மினிகேம்களில் பங்கேற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள், தமக்கு விருப்பத்துக்குரிய கதாபாத்திரங்களை போல ஆடைகளை அணிந்து செயற்பாடுகளில் பங்கேற்பது, cosplay போட்டிகளில் பங்கேற்பது, இலங்கை கொமிக் கலை அம்சங்களில் பங்கேற்பது, swap, flea சந்தையில் geek goodiesகளை வாங்கி விற்பது போன்றவற்றையும் மேற்கொள்ளவதை பங்குபற்றுநர்களுக்கு பார்வையிடக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். 

Gamer.LK (www.gamer.lk) இனால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வு முதன் முதலில் 2008 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது இலங்கையில் இடம்பெறும் மாபெரும் கேம்ஸ் நிகழ்வாக அமைந்துள்ளது. இலங்கைக்கு டிஜிட்டல் களிப்பை வழங்குவதை இலக்காக கொண்டு இந்நிகழ்வு அமைந்துள்ளதுடன், வளர்ந்து வரும் டிஜிட்டல் களிப்பு கலாசாரத்தை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. இன்று, இலங்கையில் e-sports மற்றும் கேமிங் துறை என்பது பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கை Geek கழகத்துடன் மற்றும் PRUVE கொமிக்ஸ் ஆகியவற்றுடன் Gamer.LK கைகோர்த்து மக்களுக்கு வலுவூட்டி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த துறையில் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், முன்னணி பல்தேசிய நிறுவனங்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தவும் முன்வந்துள்ளன. கேமிங் கொண்டாட்டத்துக்கு முன்னணி தொலைத்தொடர்பாடல் நிறுவனமான டயலொக் அக்ஸியாடா பிஎல்சி அனுசரணை வழங்குவதுடன், நிகழ்வின் தொழில்நுட்ப பங்காளராக HP Incம் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இந்நிகழ்வுக்கு வெள்ளி அனுசரணையாளராக MSI மற்றும் MAS ஹோல்டிங்ஸ் ஆகியன இணைந்துள்ளன. கல்வி பங்காளராக Informatics Institute of Technology இணைந்துள்ளது. 

மேலதிக விவரங்களுக்கு www.slcg.lk எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X