Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 07 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியானது அண்மையில் கிளிநொச்சியின் மகிழங்காட்டில் மேற்கொண்ட முன்னோடி விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவை இலங்கையில் அதன் இரண்டாவது 'விவசாய நவீனமயமாக்கல் கிராமமாக' தேர்ந்தெடுத்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டமானது, கிராமங்களில் விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தைப் பரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு இலட்சியப் பணியாக திகழ்வதுடன் இது, நாட்டிலுள்ள விவசாயத்திற்கான அனைத்து திறன்களையும் உள்ளடக்கியது. நாற்று நடுதல், ட்ரோன் பயன்பாடு மற்றும் காலநிலைக்கு ஏற்ற பயிர் வகைகளை நடுதல் போன்ற மேம்பட்ட நுட்பங்களை அணுகுவதை எளிதாக்குகிறது. அத்துடன் இது உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை அதிகரிக்கும்; மேலும் இந்த நவீன மய திட்டமானது திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி; வங்கியுடன் நேரடி ஈடுபாட்டின் மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் கடன் அணுகல்; சிறந்த விளைச்சல் மற்றும் புதிய சந்தைகளுக்கான அணுகல் மூலம் மேம்பட்ட வாழ்வாதாரங்கள்; விவசாய நிலங்களின் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நிலையான நடைமுறைகள்; மற்றும் சமூக ஆதரவு மற்றும் வலையமைப்பு ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
கொமர்ஷல் வங்கியானது வவுணதீவில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கல்வி மற்றும் விவசாய நிறுவனங்களுடனான ஒத்துழைப்பானது மதிப்புமிக்க அறிவுப் பகிர்வு சூழலை வளர்ப்பதாக வங்கி தெரிவித்துள்ளது.
வவுணதீவில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக இயந்திரங்களைப் பயன்படுத்தி நெல் நாற்றுகளை நடவு செய்வது தொடர்பான பயிற்சி அமர்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் வவுணதீவு விவசாயிகள் அமைப்பின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்புப் பகுதி விவசாய நிபுணர்கள் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளீதரன்; விவசாயத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் எம். பரமேஸ்வரன்; கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் டி. கிரிதரன்; விவசாயத் துறையின் மேலதிக பணிப்பாளர் திருமதி ஏ. காயத்ரி; மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி என். சத்தியானந்தி ஆகியோர் அடங்குவர். மேலும் கொமர்ஷல் வங்கியின் சிரேஷ்ட பிரதிநிதிகளில் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் டி. கஜரூபன் மற்றும் அபிவிருத்திக் கடன் திணைக்களத்தின் முகாமையாளர் டபிள்யு. டி. சி. லசந்த ஆகியோர் அடங்குவர்.
பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் புதுமையான தொழில்நுட்பங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும், அடுத்த தலைமுறையினரை புத்திசாலித்தனமான விவசாய நடைமுறைகளை மேற்கொள்வதற்கு அறிவூட்டுவதற்கும், தூண்டுவதற்கும் இந்த வகையான நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago